ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

‘கேப்டனுக்கான அனைத்து தகுதிகளும் ஹர்திக் பாண்ட்யாவுக்கு உள்ளது’ – சங்கக்கரா பாராட்டு

‘கேப்டனுக்கான அனைத்து தகுதிகளும் ஹர்திக் பாண்ட்யாவுக்கு உள்ளது’ – சங்கக்கரா பாராட்டு

ஹர்திக் பாண்ட்யா - சங்கக்கரா

ஹர்திக் பாண்ட்யா - சங்கக்கரா

கேப்டன்ஷிப் மாற்றம் என்பது கிரிக்கெட்டில் தவிர்க்க முடியாதது. அதற்கு அனைத்து வீரர்களின் ஒத்துழைப்பும் அவசியம். – சங்கக்கரா

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

கேப்டனுக்கான அனைத்து தகுதிகளும் ஹர்திக் பாண்ட்யாவுக்கு உண்டு என இலங்கை அணியின் முன்னாள் வீரரும், கிரிக்கெட் பயிற்சியாளருமான சங்கக்கரா பாராட்டு தெரிவித்துள்ளார். இலங்கைக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா நியமிக்கப்பட்டுள்ள நிலையில் அவரை பாராட்டியுள்ளார் சங்கக்கரா.

இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்யவுள்ள இலங்கை அணி 3 போட்டிகளைக் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. முதல் போட்டி ஜனவரி 3ஆம் தேதி மும்பையிலும், இரண்டாவது 20 ஓவர் போட்டி ஜனவரி 5 ஆம் தேதி புனேவிலும், கடைசி டி20 ஜனவரி 7ஆம் தேதி ராஜ்கோட் சவுராஷ்டிரா மைதானத்திலும் நடைபெறுகிறது. இதையடுத்து 3 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெறவுள்ளது. இதன் முதல் போட்டி ஜனவரி 10ஆம் தேதி கவுகாத்தி பரஸ்பரா மைதானத்திலும், 2ஆவது போட்டி ஜனவரி 12ஆம் தேதி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்திலும், 3ஆவது போட்டி ஜனவரி 15 ஆம் தேதி திருவனந்தபுரம் மைதானத்திலும் நடைபெறுகிறது.

இலங்கைக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரில் ஹர்திக் பாண்டியா (கேப்டன்), இஷான் கிஷான் (விக்கெட் கீப்பர்), ருதுராஜ் கெய்க்வாட், சுப்மன் கில், சூர்யகுமார் யாதவ் (துணை கேப்டன்), தீபக் ஹூடா, ராகுல் திரிபாதி, சஞ்சு சாம்சன், வாஷிங்டன் சுந்தர், யுஸ்வேந்திர சாஹல், அக்சர் படேல், அர்ஷ்தீப் சிங், ஹர்சல் படேல், உம்ரான் மாலிக் , சிவம் மாவி, முகேஷ் குமார்ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இந்த தொடரில் சீனியர் வீரர்களான ரோகித் சர்மா, விராட் கோலி, கே.எல். ராகுலுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக விராட் கோலி இனி ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே கவனம் செலுத்துவார் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் கேப்டனாக நியமிக்கப்பட்டிருக்கும் ஹர்திக் பாண்ட்யாவை சங்கக்கரா பாராட்டியுள்ளார்.

நினைவுகள் 2022 : ஆஸ்திரேலியா நுழைய நோவக் ஜோகோவிச்சுக்கு தடை.. டெஸ்ட் கேப்டன் பதவியை துறந்த விராட் கோலி... ஜனவரியில் நடந்த மறக்க முடியாத விளையாட்டு நிகழ்வு

சங்கக்கரா அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது- கேப்டன்ஷிப்பை மாற்றுவது,  புதிய கேப்டனின் கீழ் விளையாடுவது என்பது எப்போதுமே சவாலாகத்தான் இருக்கும். ஆனால், ஹர்திக் பாண்ட்யா மிக எளிதாக தனது புதிய கேப்டன் பொறுப்பை கையாள்வார் என்று கருதுகிறேன். கேப்டன்ஷிப் மாற்றம் என்பது கிரிக்கெட்டில் தவிர்க்க முடியாதது. அதற்கு அனைத்து வீரர்களின் ஒத்துழைப்பும் அவசியம்.

நினைவுகள் 2022 : ரஷ்யாவுக்கு ஃபிபா தடை.. கார்ல்சென்னுக்கு அதிர்ச்சி கொடுத்த பிரக்ஞானந்தா - பிப்ரவரியில் நடந்த விளையாட்டு நிகழ்வுகள்

நியூசிலாந்து, இங்கிலாந்து போன்ற வலுவான அணிகள் கேப்டன்ஷிப் மாற்றத்தின்போது சிக்கல்களை சந்தித்துள்ளன. ஆனால், ஹர்திக் பாண்ட்யாவிடம் கேப்டனுக்கான அனைத்து தகுதிகளும் உள்ளன. இளம் வீரர்களை ஒருங்கிணைத்து இலங்கை அணிக்கு கடுமையான நெருக்கடியை அவர் கொடுப்பார் என்று எதிர்பார்க்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

First published:

Tags: Cricket