Home /News /sports /

புஷ்பா பட பாடலுக்கு ஆட்டம் போட்ட ஹர்திக் பாண்டியா; அதுவும் யார் கூடன்னு பாருங்க

புஷ்பா பட பாடலுக்கு ஆட்டம் போட்ட ஹர்திக் பாண்டியா; அதுவும் யார் கூடன்னு பாருங்க

ஹர்திக் பாண்டியா

ஹர்திக் பாண்டியா

Hardik Pandya | தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் மற்றும் நடிகை ராஷ்மிகா மந்தனா உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த ஆண்டு இறுதியில் வெளியாகி பெரும் வெற்றியை வாரிக் குவித்த திரைப்படம் ’புஷ்பா தி ரைஸ்’.

    தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி என பல மொழிகளில் அகில இந்திய அளவில் வெளியான புஷ்பா திரைப்படம் பல கோடி ரூபாய் வசூலை வாரி குவித்தது. ஆந்திர மாநிலத்தில் நடைபெறும் செம்மரக் கடத்தலை கதைக்களமாக கொண்ட இந்த திரைப்படத்தில் நடிகர் அல்லு அர்ஜுனின் நடிப்பு அனைவரையும் கவர்ந்தது. இத்திரைப்படத்தில் வசனம் மற்றும் சண்டைக் காட்சிகள் மட்டுமல்லாமல் காதல் காட்சிகள் மற்றும் பாடல்கள் என அனைத்தும் ரசிக்கும்படியாக இருந்தன.

    குறிப்பாக, புஷ்பா படத்தில் நடிகையின் பெயரான ஸ்ரீ வள்ளி என்பதை மையமாகக் கொண்டு வெளியான பாடல் அனைவரது மனங்களையும் கவர்ந்தது. அதேசமயம், நடிகை சமந்தா ஆட்டத்தில் களைகட்டிய ஓ சொல்றியா மாமா பாடல் எல்லோர் மனதிலும் கொடி கட்டி பறந்தது. இந்த திரைப்படத்தை ரசிப்பதோடு மட்டுமல்லாமல், ஓ சொல்றியா மாமா, ஸ்ரீ வள்ளி ஆகிய பாடல்களுக்கு ரசிகர்கள் பலர் நடனமாடி ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் எண்ணற்ற வீடியோக்களை பதிவு செய்து வருகின்றனர்.

    இது போன்று வீடியோவை வெளியிட்டு வருபவர்களின் வரிசையில் தற்போது லேட்டஸ்டாக இணைந்திருப்பவர் கிரிக்கெட் வீரர் ஹார்திக் பாண்டியா ஆவார். கிரிக்கெட்டில் பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என அனைத்திலும் ஜொலித்து தன்னை ஆல்-ரவுண்டராக நிரூபித்த ஹார்திக் பாண்டியா, சினிமாவை ரசிப்பதிலும் தனக்கு மிகுந்த ஈடுபாடு உண்டு என்பதை இதன் மூலம் வெளிப்படுத்தியுள்ளார்.

    ”இந்தப் பாட்டி தான் எங்க ஸ்ரீ வள்ளி’’ என்ற தலைப்புடன் இன்ஸ்டாகிராமில் ஹர்திக் பாண்டியா வெளியிட்டுள்ள வீடியோ பல லட்சக்கணக்கானோரின் மனங்களை கொள்ளை அடித்து வருகிறது. வீடியோவில், ஸ்ரீ வள்ளி பாடலுக்கு ஹார்திக் பாண்டியாவும், அவரது பாட்டியும் மிக நேர்த்தியாக நடனம் ஆடுகின்றனர். குறிப்பாக, இருவரும் ஒரே மாதிரியான வண்ணம் மற்றும் டிசைன் கொண்ட உடைகளை அணிந்திருப்பது கவனிக்கத் தகுந்த விஷயமாக உள்ளது.

    தனது பதிவில் நடிகர் அல்லு அர்ஜுனையும் ஹார்திக் பாண்டியா டேக் செய்துள்ளார். வீடியோவை காண இங்கே கிளிக் செய்யவும்.




    ஹார்திக் பாண்டியாவின் வீடியோவுக்கு நெட்டிசன்கள் பலர் ஹார்டின்களை பறக்கவிட்டு வருகின்றனர். சுமார் 30 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் இந்த வீடியோவை லைக் செய்துள்ளனர். குறிப்பாக, பல ரசிகர்கள் இதை வெகுவாகப் பாராட்டி கமெண்ட் செய்துள்ளனர்.

    தென்னிந்திய திரைப்படங்கள் வடமாநிலங்களில் உள்ள வெகுஜன மக்களின் மனங்களை கொள்ளை அடித்து இருப்பது மட்டுமல்லாமல், கிரிக்கெட் வீரர்கள் நடிகர். நடிகைகள் என அனைத்து நட்சத்திரங்களின் மனதிலும் இடம் பிடித்திருப்பது மிகப்பெரிய சாதனையாக கருதப்படுகிறது.
    Published by:Vijay R
    First published:

    Tags: Cricket, Hardik Pandya

    அடுத்த செய்தி