Home /News /sports /

IPL போதும், ரஞ்சி டிராபி வேண்டாம்: ஹர்திக் பாண்டியா விலகல்

IPL போதும், ரஞ்சி டிராபி வேண்டாம்: ஹர்திக் பாண்டியா விலகல்

ரஞ்சி ட்ராபியிலிருந்து விலகிய ஹர்திக் பாண்டியா

ரஞ்சி ட்ராபியிலிருந்து விலகிய ஹர்திக் பாண்டியா

Hardik Pandya | ரஞ்சி டிராபி போட்டிகள் வரும் 10ம் தேதி முதல் மார்ச் 15ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் பரோடா அணியிலிருந்து டாப் ஸ்டார் ஹர்திக் பாண்டியா விலகியுள்ளார். ஐபிஎல் புதிய அணியான அகமதாபாத் டைட்டன்ஸ் அணிக்கு பாண்டியா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும் படிக்கவும் ...
    ரஞ்சி டிராபி போட்டிகள் வரும் 10ம் தேதி முதல் மார்ச் 15ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் பரோடா அணியிலிருந்து டாப் ஸ்டார் ஹர்திக் பாண்டியா விலகியுள்ளார். ஐபிஎல் புதிய அணியான அகமதாபாத் டைட்டன்ஸ் அணிக்கு பாண்டியா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

    38 அணிகள் பங்கேற்கும் ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியின் லீக் சுற்று ஆட்டங்கள் ராஜ்கோட், கட்டாக், சென்னை, ஆமதாபாத், திருவனந்தபுரம், டெல்லி, அரியானா, கவுகாத்தி, கொல்கத்தா ஆகிய இடங்களில் நடைபெறுகிறது.

    முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடந்த 20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கு பிறகு இந்திய அணியில் இடம் பெறாத ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா, ரஞ்சி கோப்பை போட்டியில் விளையாடி தனது திறமையை நிரூபித்து அணிக்கு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 28 வயதான ஹர்திக் பாண்ட்யா, ரஞ்சி கோப்பை போட்டியில் இருந்து ஒதுங்கி இருக்கிறார்.

    நேற்று பரோடா ரஞ்சி அணி அறிவிக்கப்பட்டது, இதில் ஹர்திக் பாண்டியா இடம்பெறவில்லை. ஹர்திக் பாண்டியாவின் சகோதரர் குருணல் பாண்டியா இடம் பிடித்துள்ளார். ஐ.பி.எல். போட்டிக்கான அகமதாபாத் அணியின் கேப்டனாக சமீபத்தில் நியமிக்கப்பட்ட ஹர்திக் பாண்டியா அடுத்த மாதம் கடைசி வாரத்தில் தொடங்க திட்டமிடப்பட்டு இருக்கும் ஐ.பி.எல்.போட்டியின் மூலம் மறுபிரவேசம் செய்வார் என்று தெரிகிறது.

    ஐபிஎல் போட்டிதான் இந்திய அணிக்குள் நுழையும் நுழைவாயில், இதில் பிளேயர்கள் ஸ்பான்சர்கள், அணியின் ஸ்பான்சர்கள்தான் பெரும்பாலும் பிசிசிஐ ஸ்பான்சர்களாகவும் இருக்கின்றனர், அணித்தேர்வு என்பது வணிகமயமாகி நீண்ட காலம் ஆகிவிட்டது, இதெல்லாம் ஹர்திக் பாண்டியா போன்றோருக்குத் தெரியாதா என்ன?

    அதனால் ரஞ்சி டிராபி போட்டிகளில் வெயிலில் காய்வதை விட ஐபிஎல் போட்டிகளில் ஆடலாம் என்று முடிவெடுத்திருப்பார். மேலும் ஐபிஎல் போட்டிகளில் பெர்பார்மன்ஸ் முன் பின் இருந்தாலும் பணம் வந்து விடும். ஆனால் இந்திய அணியில் ஆடி சரியாக ஆடவில்லை எனில் ட்ரால் உள்ளிட்ட வசைகளை எதிர்கொள்ள நேரிடும். இதுவும் பாண்டியாவுக்குத் தெரியும்.

    Also Read: India vs West Indies: ரோஹித் சர்மா ஆல் டைம் கிரேட்- இயன் பிஷப் புகழாரம்
    முதன் முதலாக இந்திய வீரர் ஒருவர் தேசிய கிரிக்கெட்டின் நுழைவாயில் ஆன ரஞ்சி டிராபியையும் தன்னை வளர்த்தெடுத்து இந்த அளவுக்கு கொண்டு விட்ட பரோடா அணியையும் புறக்கணித்து ஐபிஎல் தொடரை தேர்ந்தெடுத்துள்ளார், தனியார் கிரிக்கெட்டுக்கு முன்னுரிமை அளித்தது குறிப்பிடத்தக்கது.
    Published by:Muthukumar
    First published:

    Tags: Hardik Pandya, IPL 2022, Ranji Trophy

    அடுத்த செய்தி