Home /News /sports /

டி20 ஆல்ரவுண்டர்கள் தரவரிசையில் ஹர்திக் பாண்டியா பாய்ச்சல்

டி20 ஆல்ரவுண்டர்கள் தரவரிசையில் ஹர்திக் பாண்டியா பாய்ச்சல்

ஹர்திக் பாண்ட்யா

ஹர்திக் பாண்ட்யா

ஐசிசி வெளியிட்டுள்ள டி20 ஆல்ரவுண்டர்கள் தரவரிசையில் ஹர்திக் பாண்டியா முன்னேறி 5ம் இடத்துக்கு  சரசரவென முன்னேறியுள்ளார். 

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
ஆசியக் கோப்பை கிரிக்கெட்டில் பாகிஸ்தானுக்கு எதிராக 3 விக்கெட்டுகளையும் பேட்டிங்கிலும் பின்னி எடுத்து சிக்சர் அடித்து வெற்றி பெறச் செய்த ஹர்திக் பாண்டியா ஆல்ரவுண்டர் என்று தன்னை மீண்டும் நிரூபிக்கத் தொடங்கி விட்டார், அதனால் தரவரிசையில் அவர் 8 இடங்கள் முன்னேறி 5ம் இடத்துக்கு வந்துள்ளார்.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி), 20 ஓவர் போட்டி வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை நேற்று வெளியிட்டது. இதன்படி பேட்டிங் தரவரிசையில் டாப்-10 இடங்களில் மாற்றமில்லை. பாகிஸ்தானின் பாபர் அசாம் முதலிடத்திலும், முகமது ரிஸ்வான் 2-வது இடத்திலும், இந்தியாவின் சூர்யகுமார் யாதவ் 3-வது இடத்திலும் தொடருகிறார்கள்.

இந்திய கேப்டன் ரோகித் சர்மா 17-வது இடத்திலும், விராட் கோலி 34-வது இடத்திலும் உள்ளனர். பந்து வீச்சாளர்களின் தரவரிசையில் முதலிடத்தில் ஆஸ்திரேலியாவின் ஹேசில்வுட்டும் (792 புள்ளி), 2-வது இடத்தில் தென்ஆப்பிரிக்காவின் தப்ரைஸ் ஷம்சியும் (716 புள்ளி) இருக்கிறார்கள். ஆப்கானிஸ்தானின் ரஷித்கான் (708 புள்ளி) இரு இடம் உயர்ந்து 3-வது இடத்தை பிடித்துள்ளார்.

Also Read : சூரியகுமார் யாதவை சிரம் தாழ்த்தி வணங்கிய விராட் கோலி - வைரல் வீடியோ

ஆசிய கிரிக்கெட்டில் கலக்கும் மற்றொரு ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் முஜீப் ரகுமான் 7 இடங்கள் எகிறி 9-வது இடத்துக்கு வந்துள்ளார். இந்திய தரப்பில் அதிகபட்சமாக புவனேஷ்வர்குமார் 8-வது இடது இடம் வகிக்கிறார். ஆல்-ரவுண்டர் தரவரிசையில் இந்தியாவின் ஹர்திக் பாண்ட்யா 8 இடங்கள் அதிகரித்து 5-வது இடத்தை பெற்றுள்ளார்.

பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் 3 விக்கெட்டுடன், 33 ரன்களும் எடுத்ததால் முன்னேற்றம் பெற்றார். அவரது சிறந்த தரநிலை இதுவாகும். டாப்-4 இடங்களில் முறையே முகமது நபி, ஆப்கானிஸ்தான், ஷகிப் அல்-ஹசன், வங்காளதேசம், மொயீன் அலி, இங்கிலாந்து, மேக்ஸ்வெல், ஆஸ்திரேலியா ஆகியோர் உள்ளனர்.
Published by:Vijay R
First published:

அடுத்த செய்தி