ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

டி20-க்கான இந்திய அணியின் கேப்டனாக பாண்ட்யா மீண்டும் நியமனம்… ஆஸ்திரேலிய தொடரில் இஷானுக்கு வாய்ப்பு

டி20-க்கான இந்திய அணியின் கேப்டனாக பாண்ட்யா மீண்டும் நியமனம்… ஆஸ்திரேலிய தொடரில் இஷானுக்கு வாய்ப்பு

ஹர்திக் பாண்ட்யா

ஹர்திக் பாண்ட்யா

உள்ளூர் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சாதனைபடைத்த நிலையில், பிரித்வி ஷாவுக்கு வாய்ப்பு தேடி வந்துள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

நியூஸிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் இடம்பெறும் இந்திய அணி வீரர்களின் பட்டியலை பிசிசிஐ நேற்று வெளியிட்டுள்ளது. இலங்கை அணிக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில், ஹர்திக் பாண்ட்யாவிற்கு மீண்டும் கேப்டன் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது. நியூசிலாந்து அணிக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதே போன்று ஒரு நாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளுக்கான இந்திய அணியின் கேப்டனாக, ரோகித் சர்மா செயல்படுவார். நியூசிலாந்து அணிக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் பிரித்வி ஷா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். உள்ளூர் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சாதனைபடைத்த நிலையில், பிரித்வி ஷாவுக்கு வாய்ப்பு தேடி வந்துள்ளது. இதேபோன்று இந்திய அணியின் மற்றொரு அதிரடி ஆட்டக்காரரும், விக்கெட் கீப்பருமான இஷான் கிஷன் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் இடம்பெற்றுள்ளார்.

கே.எல். ராகுல் மற்றும் அக்சர் படேல் ஆகியோருக்கு நியூசிலாந்து தொடரில் இருந்து ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. முழங்கால் அறுவை சிகிச்சை மேற்கொண்ட ரவீந்திர ஜடேஜா ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இடம்பெற்றுள்ளார். இருப்பினும் அவர் தனது உடல் தகுதியை நிரூபிக்க வேண்டும் என்று பிசிசிஐ உத்தரவிட்டுள்ளது. இதேபோன்று ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் ஜஸ்பிரித் பும்ரா பங்கேற்க மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டிக்கான இந்திய அணி:

ரோஹித் சர்மா (கேப்டன்), ஷுப்மான் கில், இஷான் கிஷான் (விக்கெட் கீப்), விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், KS பாரத் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா (துணை கேப்டன்), வாஷிங்டன் சுந்தர், ஷாபாஸ் அகமது , ஷர்துல் தாக்கூர், யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், முகமது. ஷமி, முகமது. சிராஜ், உம்ரான் மாலிக்.

நியூசிலாந்துக்கு எதிரான இந்திய டி20 அணி:

ஹர்திக் பாண்டியா (கேப்டன்), சூர்யகுமார் யாதவ் (துணை கேப்டன்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), ருதுராஜ் கெய்க்வாட், சுப்மன் கில், தீபக் ஹூடா, ராகுல் திரிபாதி, ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ். , யுஸ்வேந்திர சாஹல், அர்ஷ்தீப் சிங், உம்ரான் மாலிக், சிவம் மாவி, பிரித்வி ஷா, முகேஷ் குமார்.

‘எதிர்காலத்தில் இந்திய அணியின் சிறந்த கேப்டனாக கே.எல்.ராகுல் இருப்பார்’ – ஆண்டி ஃப்ளார் கருத்து

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணி

ரோகித் சர்மா (கேப்டன்), கே.எல். ராகுல் (துணை கேப்டன்), ஷுப்மன் கில், சேதேஷ்வர் புஜாரா, விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எஸ். பாரத் (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷான் (விக்கெட் கீப்பர்), ஆர். அஷ்வின், அக்சர் படேல், குல்தீப் யாதவ், ரவீந்திர ஜடேஜா. , முகமது. ஷமி, முகமது. சிராஜ், உமேஷ் யாதவ், ஜெய்தேவ் உனட்கட், சூர்யகுமார் யாதவ்.

First published:

Tags: Cricket