தப்புதான் மன்னிச்சிடுங்க... சரண்டரான ஹர்திக் பாண்டியா!

#HardikPandya apologises after receiving flak | சச்சின் குறித்து ஹர்திக் பாண்டியா பேசிய கருத்துக்கு சமூக வலைதளங்களில் கடும் விமர்சனம் எழுந்தது. #KoffeeWithKaran

news18
Updated: January 9, 2019, 2:05 PM IST
தப்புதான் மன்னிச்சிடுங்க... சரண்டரான ஹர்திக் பாண்டியா!
‘காபி வித் கரண்’ நிகழ்ச்சியில் ஹர்திக் பாண்டியா. (Twitter)
news18
Updated: January 9, 2019, 2:05 PM IST
சச்சின் டெண்டுல்கர், பெண்கள் என்று டிவி நிகழ்ச்சியில் ஏடாகூடமாக பேசிய ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுள்ளார்.

தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகி வரும் ‘காஃபி வித் கரண்’ நிகழ்ச்சியை பாலிவுட் இயக்குனர் கரண் ஜோஹர் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சியில் சினிமா பிரபலங்கள், கலைஞர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றுள்ளனர்.

அண்மையில் நடந்த நிகழ்ச்சியில், முதல் முறையாக கிரிக்கெட் அணி வீரர்கள் இருவர் பங்கேற்றனர். இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க வீரர் கே.எல்.ராகுல் மற்றும் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா ஆகிய இருவரும் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியில் உங்களுக்குப் பிடித்த படங்கள், நடிகர்கள், நடிகைகள் என பல சுவராஸ்யமான தகவல்களை பிரபலங்கள் பகிர்ந்துகொள்வார்கள்.

Koffee With Karan, Hardik Pandya, ஹர்திக் பாண்டியா, கே.எல்.ராகுல்.
தொகுப்பாளர் கரண் ஜோஹர் உடன் ஹர்திக் பாண்டியா மற்றும் கே.எல்.ராகுல். (Twitter)


‘ரேபிட் ஃபையர்’ என்ற கேள்வி பதில் சுற்றில் சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி ஆகிய இருவரில் யார் சிறந்த பேட்ஸ்மேன் என கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு சிறிது தயங்காமல் கே.எல்.ராகுலும், ஹர்திக் பாண்டியாவும், இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியின் பெயரைக் குறிப்பிட்டனர்.

மேலும், பெண்கள் மற்றும் இனவெறியைத் தூண்டும் வகையிலும் சில சர்ச்சைக்குரிய கருத்துகளை பாண்டியா கூறியிருந்தார்.
Loading...
Hardik Pandya, KL Rahul, ஹர்திக் பாண்டியா, கே.எல்.ராகுல்
‘காஃபி வித் கரண்’ நிகழ்ச்சியில் கே.எல்.ராகுல் மற்றும் ஹர்திக் பாண்டியா. (Twitter/HardikPandya)


சர்வதேச கிரிக்கெட் அரங்கில் பல்வேறு சாதனைகள் படைத்த ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரை விட, கோலி சிறந்த பேட்ஸ்மேன் என்று கூறியதால், இருவரையும் சமூக வலைதளங்களில் கிரிக்கெட் ரசிகர்கள் கடுமையாக விமர்சித்தனர்.

இந்நிலையில், தனது தவறுக்கு ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா மன்னிப்பு கேட்டுள்ளார். “காஃபி வித் கரண் நிகழ்ச்சியில் நான் கூறிய கருத்துக்கள் எந்த வகையிலாவது காயப்படுத்தி இருந்தால், அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.

எந்தவொரு வகையிலும் யாருடைய உணர்ச்சியையும் காயப்படுத்த நினைக்கவில்லை” என்று அவர் ட்விட்டரில் கூறியுள்ளார்.ஹர்திக் பாண்டியா மன்னிப்பு கேட்டும், கிரிக்கெட் ரசிகர்கள் சமாதானம் ஆகவில்லை. அவர்மீது பிசிசிஐ நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

சிட்னி வந்து சேர்ந்தது இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணி!

Also See..

First published: January 9, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...