Home /News /sports /

நடுக்கடலில் நடிகையிடம் காதலை வெளிப்படுத்திய ஹர்திக் பாண்டியா..! வைரல் வீடியோ

நடுக்கடலில் நடிகையிடம் காதலை வெளிப்படுத்திய ஹர்திக் பாண்டியா..! வைரல் வீடியோ

Hardik Pandya | Natasa Stankovic | நடுக்கடலில் சொசுகு படகு ஒன்றில் நடாசாவிடம் மோதிரத்தை பரிசாக கொடுத்து தனது காதலை வெளிப்படுத்தினார்.

    கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா நடிகை நடாசா ஸ்டோன்விக்கிடம் தனது காதலை வெளிப்படுத்திய வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    இந்திய அணியின் ஆல்-ரவுன்டரான ஹர்திக் பாண்டியாவும் நடிகை நடாசாவும் காதலித்து வருவதாக நீண்ட நாட்கள் கிசுகிசுக்கப்பட்டது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அவரிடம் காதலை சொல்லும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    நடுக்கடலில் சொசுகு படகு ஒன்றில் நடாசாவிடம் மோதிரத்தை பரிசாக கொடுத்து தனது காதலை வெளிப்படுத்தினார். இதற்காகவே காத்திருந்தது போல் நாடாசும் உற்சாகமுடன் அதனை ஏற்றுக் கொண்டார். மோதிரத்தை பரிசாக பெற்றுக் கொண்ட பின் நடாசா, ஹர்திக் பாண்டியாவை முத்தமிட்டு தனது காதலை வெளிப்படுத்தினார்.



     




    View this post on Instagram




     

    Forever yes 🥰💍❤️ @hardikpandya93


    A post shared by 🎀Nataša Stanković🎀 (@natasastankovic__) on








     




    View this post on Instagram




     

    Mai tera, Tu meri jaane, saara Hindustan. 👫💍 01.01.2020 ❤️ #engaged


    A post shared by Hardik Pandya (@hardikpandya93) on






    ஹர்திக் பாண்டியா முதுகுப்பகுதியில் ஏற்பட்ட காயத்தால் லண்டனில் அறுவை சிகிச்சை செய்து கொண்டார். தற்போது அதிலிருந்து மீண்டு தீவிரமாக உடற்பயிற்சி செய்து வருகிறார்.
    Published by:Vijay R
    First published:

    Tags: Cricket, Hardik Pandya

    அடுத்த செய்தி