• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • சச்சினைவிட கோலி பெஸ்டா? ராகுல், பாண்டியாவை அடிச்சுத் தூக்கிய நெட்டிசன்கள்!

சச்சினைவிட கோலி பெஸ்டா? ராகுல், பாண்டியாவை அடிச்சுத் தூக்கிய நெட்டிசன்கள்!

‘காபி வித் கரண்’  நிகழ்ச்சியில் கே.எல்.ராகுல் மற்றும் ஹர்திக் பாண்டியா. (Twitter/HardikPandya)

‘காபி வித் கரண்’ நிகழ்ச்சியில் கே.எல்.ராகுல் மற்றும் ஹர்திக் பாண்டியா. (Twitter/HardikPandya)

KL Rahul and Hardik Pandya became the first cricketers on Koffee with Karan | ‘காபி வித் கரண்’ நிகழ்ச்சியில் முதல் முறையாக கிரிக்கெட் வீரர்கள் கே.எல்.ராகுல் மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகிய இருவரும் கலந்துகொண்டனர்.

  • News18
  • Last Updated :
  • Share this:
    கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரை விட விராட் கோலி சிறந்த பேட்ஸ்மேன் என கே.எல்.ராகுலும், ஹர்திக் பாண்டியாவும் கூறியதால் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ட்விட்டரில் வறுத்தெடுத்தனர்.

    தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகி வரும் ‘காபி வித் கரண்’ நிகழ்ச்சியை பாலிவுட் இயக்குனர் கரண் ஜோஹர் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சியில் சினிமா பிரபலங்கள், கலைஞர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றுள்ளனர்.

    கே.எல்.ராகுல், kl rahul
    பயிற்சியின் போது கே.எல்.ராகுல். (File)


    முதல் முறையாக கிரிக்கெட் வீரர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க வீரர் கே.எல்.ராகுல் மற்றும் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா ஆகிய இருவரும் கலந்துகொண்டனர்.

    நிகழ்ச்சியில் உங்களுக்குப் பிடித்த படங்கள், நடிகர்கள், நடிகைகள் என பல சுவராஸ்யமான தகவல்களை பிரபலங்கள் பகிர்ந்துகொள்வார்கள்.

    அதில், ரேபிட் ஃபையர் என்ற கேள்வி பதில் சுற்றில் சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி ஆகிய இருவரில் யார் சிறந்த பேட்ஸ்மேன் என கேட்கப்பட்டது. இதற்கு சிறிது தயங்காமல் கே.எல்.ராகுலும், ஹர்திக் பாண்டியாவும், இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியின் பெயரைக் குறிப்பிட்டனர்.

    Hardik Pandya, ஹர்திக் பாண்டியா
    இந்திய டெஸ்ட் அணியில் மீண்டும் இடம் பிடித்த ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா வலைப்பயிற்சியில் ஈடுபட்டார். (Twitter/BCCI)


    சர்வதேச கிரிக்கெட்டில் ஜாம்பவானாக வலம் வந்த சச்சின் டெண்டுல்கரை விட கோலி சிறந்த பேட்ஸ்மேன் என்று கூறியது கிரிக்கெட் ரசிகர்களிடையே ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது.

    இதனைத் தொடர்ந்து, கே.எல்.ராகுலையும், ஹர்திக் பாண்டியாவையும் சமூக வலைதளங்களில் கிரிக்கெட் ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.













    ஆஸ்திரேலியாவை புரட்டி எடுக்கப் புறப்பட்டார் ‘தல’ தோனி!

    Also Watch - Photos: ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரை வென்றபிறகு இந்திய வீரர்களின் வெற்றிக் கொண்டாட்டம்...

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Murugesan L
    First published: