பாண்டியா, ராகுலுக்கு தடை: பிசிசிஐ அதிரடி நடவடிக்கை!

Hardik Pandya and KL Rahul be put under suspension | ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் அணியில் ஹர்திக் பாண்டியா, கே.எல்.ராகுல் ஆகியோர் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

news18
Updated: January 11, 2019, 3:04 PM IST
பாண்டியா, ராகுலுக்கு தடை: பிசிசிஐ அதிரடி நடவடிக்கை!
ஹர்திக் பாண்டியா மற்றும் கே.எல்.ராகுல்.
news18
Updated: January 11, 2019, 3:04 PM IST
பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்த ஹர்திக் பாண்டியா, கே.எல்.ராகுல் ஆகிய இருவருக்கும் போட்டிகளில் பங்கேற்க தடைவிதித்து பிசிசிஐ அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா மற்றும் கே.எல்.ராகுல் ஆகியோர் தனியார் தொலைக்காட்சியில் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

Hardik Pandya, KL Rahul, ஹர்திக் பாண்டியா, கே.எல்.ராகுல்
‘காபி வித் கரண்’ நிகழ்ச்சியில் கே.எல்.ராகுல் மற்றும் ஹர்திக் பாண்டியா. (Twitter/HardikPandya)


நிகழ்ச்சியில், பெண்களின் வாழ்க்கை முறை மற்றும் இனவெறியைத் தூண்டுதல் உள்ளிட்டவை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் இருவரும் பதிலளித்தனர். இதனால், அவர்கள் இருவரும் கடுமையான விமர்சனங்களுக்கு ஆளாகினர். இதனை அடுத்து, தனது தவறுக்கு ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா மன்னிப்பு கேட்டார்.

Hardik Pandya, ஹர்திக் பாண்டியா
‘காபி வித் கரண்’ நிகழ்ச்சியில் ஹர்திக் பாண்டியா. (Twitter)


இந்த விவாகாரம் குறித்து, ஹர்திக் பாண்டியா மற்றும் கே.எல்.ராகுல் ஆகியோர் விளக்கம் அளிக்க வேண்டும் என இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) நோட்டீஸ் அனுப்பி இருந்தது. இருவருக்கும் 2 போட்டிகளில் விளையாடத் தடைவிதிக்க திட்டமிட்டுள்ளதாக பிசிசிஐ நிர்வாகக்குழு தலைவர் வினோத் ராய் தெரிவித்திருந்தார்.

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, ஹர்திக் பாண்டியா, கே.எல்.ராகுல் விவகாரத்தில் பிசிசிஐ-யின் முடிவுக்காக காத்திருப்பதாக தெரிவித்திருந்தார்.
Loading...
Virat Kohli, கோலி
கோலியுடன் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி. (AFP)


இந்நிலையில், ஹர்திக் பாண்டியா, கே.எல்.ராகுல் ஆகியோருக்கு தடைவிதித்துள்ளதாக பிசிசிஐ-யின் நிர்வாகக்குழு உறுப்பினர் டயானா எடுல்ஜி கூறியுள்ளார்.

“தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்த விவகாரத்தில், முதற்கட்டமாக ஹர்திக் பாண்டியா, கே.எல்.ராகுல் ஆகியோருக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. அடுத்த கட்ட நடவடிக்கை பின்னர் அறிவிக்கப்படும்” என்று அவர் தெரிவித்தார்.

இதனால், ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் அணியில் ஹர்திக் பாண்டியா, கே.எல்.ராகுல் ஆகியோர் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

Also Watch...First published: January 11, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...