முகப்பு /செய்தி /விளையாட்டு / ‘நட்டு’ பிரில்லியண்ட்: நடராஜனைக் குறிப்பிட்ட கேப்டன் கோலி

‘நட்டு’ பிரில்லியண்ட்: நடராஜனைக் குறிப்பிட்ட கேப்டன் கோலி

நடராஜன்.

நடராஜன்.

புனேவில் நடந்த இந்தியா-இங்கிலாந்து 3வது ஒருநாள் போட்டியில் கடைசி ஓவரை அபாரமாக வீசி வெற்றிக்கு வித்திட்ட நடராஜனை கோலி சிறப்பாகக் குறிப்பிட்டுப் பேசினார். 

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

புனேவில் நடந்த இந்தியா-இங்கிலாந்து 3வது ஒருநாள் போட்டியில் கடைசி ஓவரை அபாரமாக வீசி வெற்றிக்கு வித்திட்ட நடராஜனை கோலி சிறப்பாகக் குறிப்பிட்டுப் பேசினார்.

புனேயில் நேற்று நடைபெற்ற 3வது ஒருநாள் போட்டியில் 329 ரன்கள் இலக்கை விரட்டிய இங்கிலாந்து அணி முக்கியமாக 2 ஓவர்களைச் சரியாக ஆடாததால் வெற்றி வாய்ப்பைக் கோட்டை விட்டது.

அந்த 2 ஓவர் ஹர்திக் பாண்டியா மற்றும் கடைசி ஓவரை வீசிய தமிழக வீரர் நட்டு என்கிற நடராஜனின் ஓவர்தான். ஒருமுறை ஷார்ஜாவில் 49வது ஓவரை கபில் வீச 50வது ஓவரை சேத்தன் சர்மா வீசி பாகிஸ்தானின் ஜாவேத் மியாண்டட் கடைசி பந்தில் சிக்சர் அடித்து பாகிஸ்தான் அபார வெற்றி பெற்றதை இன்று வரை இந்திய ரசிகர்களால் ஏமாற்றத்தைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

அதேபோல்தான் விராட் கோலி 3 ஓவர்களில் 23 ரன்கள் தேவை என்ற நிலையில் சாம் கரண் அப்போதுதான் ஷர்துல் தாக்கூரை ஒவே ஓவரில் 18 ரன்கள் விளாசியுள்ளார், நாம் எதற்கும் அனுபவ வீச்சாளர்களையே நம்புவோம் என்று புவனேஷ்வர் குமார் ஓவரை முடித்து, பாண்டியாவுக்கு 49வது ஓவரைக் கொடுத்தார். இருவரும் 2 ஓவர்களில் 9 ரன்களையே கொடுத்தனர்.

இதனையடுத்து கடைசி ஓவரில் 14 ரன்கள் தேவை என்ற நிலையில் நடராஜன் அபாரமாக வீசினார் சாம் கரனால் ஒன்றும் செய்ய முடியவில்லை, மைக்கேல் வான் கூறியது போல் கடும் நெருக்கடியிலும் பதற்றத்திலும் துல்லிய யார்க்கரை வீசினார் நடராஜன், ஏனெனில் யார்க்கரில் பெரிய ரிஸ்க் என்னவெனில் சரியாக விழவில்லை எனில் புல்டாஸ் ஆகி ஸ்டேண்ட்ஸுக்கு அடிப்பார்கள். ஆனால் நடராஜன் தொழில்நேர்த்தியுடன் பந்துகளை வீசி திக் திக் ஓவரை சிறப்பாக வீசினார்.

சாம் கரனும் ‘நடராஜன் ஒரு சிறந்த பவுலர்’ என்று பாராட்டினார்.

இந்நிலையில் இந்திய கேப்டன் விராட் கோலி கூறும்போது, “நான் ஏற்கெனவே கூறியது போல் டாப் அணிகள் மோதும் போது விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது என்று. இங்கிலாந்து தோற்று விட்டோம் என்று போட்டியின் எந்தக் கட்டத்திலும் கைவிட மாட்டார்கள். கடைசி வரை போராடுவார்கள்.

சாம் கரன் அபாரமாக ஆடினார். ஆனால் தொடர்ந்து விக்கெட்டுகளைக் கைப்பற்றி அவர்கள் மேல் நெருக்கடியை அதிகரித்தோம். கடைசி 2 ஓவர்களில் மைண்ட் செட் மாறிவிட்டது.

ஹர்திக்கும் நட்டுவும் பிரில்லியன்ட் ஆக பினிஷ் செய்து கொடுத்தனர். யார் கேட்சை விட்டாலும் அது ஏமாற்றம்தான். எல்லோரும் அணிக்காக சிறந்தவற்றை அர்ப்பணிக்கத் தயாராகவே இருக்கிறார்கள், ஆனால் கேட்ச்கள் சில வேளைகளில் நழுவவே செய்யும்.

ஆனால் தனிப்பட்ட வீரர்கள் என்ற அளவில் யாரிடத்திலும் தீவிரம் குறையவில்லை என்று கூற முடியும். அதனால்தான் வெற்றி சாத்தியமானது” என்றார் விராட் கோலி.

First published:

Tags: Captain Virat Kohli, Cricketer natarajan, India Vs England, T natarajan