ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் பாண்ட்யா சகோதரர்கள் சந்திப்பு…

உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் பாண்ட்யா சகோதரர்கள் சந்திப்பு…

அமித் ஷாவுடன் பாண்ட்யா சகோதரர்கள்

அமித் ஷாவுடன் பாண்ட்யா சகோதரர்கள்

இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடர் ஜனவரி 3ஆம் தேதி தொடங்குகிறது

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் பாண்ட்யா சகோதரர்களான ஹர்திக் மற்றும் க்ருனல் ஆகியோர் இன்று சந்தித்து பேசினர். இன்னும் சில தினங்களில் இலங்கை அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடர் தொடங்கவுள்ள நிலையில் இந்த சந்திப்பு நடந்துள்ளது. இதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் கவனம் ஈர்த்து வருகின்றன. புகைப்படங்களை பதிவிட்டுள்ள ஹர்திக் பாண்ட்யா, ள்ள ஹர்திக் பாண்ட்யா, ‘எங்களை அழைத்து, எங்களுடன் நேரம் செலவிட்ட மதிப்பிற்குரிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு நன்றி. உங்களை சந்தித்ததை மிகுந்த மரியாதையாக கருதுகிறோம்’ என்று கூறியுள்ளார்.

வங்கதேசத்துடன் உடனான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தாலும், டெஸ்டில் சிறப்பாக விளையாடிய இந்திய வீரர்கள் 2 டெஸ்டிலும் வெற்றியைத் தேடித் தந்தனர். இதையடுத்து இலங்கை அணியுடனான 20 ஓவர் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்தியஅணி பங்கேற்கவுள்ளது.

அடுத்த ஆண்டு ஒருநாள் போட்டிக்கான உலக்கோப்பை தொடர் நடைபெறவுள்ள நிலையில் இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுடனான கிரிக்கெட் தொடர் முக்கியத்துவம் பெறுகிறது. இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்யவுள்ள இலங்கை அணி 3 போட்டிகளைக் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. முதல் போட்டி ஜனவரி 3ஆம் தேதி மும்பையிலும், இரண்டாவது 20 ஓவர் போட்டி ஜனவரி 5 ஆம் தேதி புனேவிலும், கடைசி டி20 ஜனவரி 7ஆம் தேதி ராஜ்கோட் சவுராஷ்டிரா மைதானத்திலும் நடைபெறுகிறது. இதையடுத்து 3 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெறவுள்ளது.

இதன் முதல் போட்டி ஜனவரி 10ஆம் தேதி கவுகாத்தி பரஸ்பரா மைதானத்திலும், 2ஆவது போட்டி ஜனவரி 12ஆம் தேதி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்திலும், 3ஆவது போட்டி ஜனவரி 15 ஆம் தேதி திருவனந்தபுரம் மைதானத்திலும் நடைபெறுகிறது.

இலங்கைக்கு எதிரான டி20 போட்டியில் விளையாடும் இந்திய அணி – 

ஹர்திக் பாண்டியா (கேப்டன்), இஷான் கிஷான் (விக்கெட் கீப்பர்), ருதுராஜ் கெய்க்வாட், சுப்மன் கில், சூர்யகுமார் யாதவ் (துணை கேப்டன்), தீபக் ஹூடா, ராகுல் திரிபாதி, சஞ்சு சாம்சன், வாஷிங்டன் சுந்தர், யுஸ்வேந்திர சாஹல், அக்சர் படேல், அர்ஷ்தீப் சிங், ஹர்சல் படேல், உம்ரான் மாலிக் , சிவம் மாவி மற்றும் முகேஷ் குமார்.

இலங்கைக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விளையாடும் இந்திய அணி –   

ரிஷப் பந்த் உயிரைக் காக்க உதவிய பஸ் டிரைவர், நடத்துனருக்கு அரசு பாராட்டு….

ரோஹித் சர்மா (கேப்டன்), சுப்மான் கில், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல் (துணை கேப்டன்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா (வி.சி), வாஷிங்டன் சுந்தர், யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், அக்சர் படேல், முகமது. ஷமி, முகமது. சிராஜ், உம்ரான் மாலிக் மற்றும் அர்ஷ்தீப் சிங்.

First published:

Tags: Cricket