என்ன ஆர்சிபி இந்த டிரிப் அடி கொஞ்சம் ஓவரோ - கலாய்த்த ஹர்பஜன் சிங்

4 ஓவர்கள் வீசி 20 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்திய ஹர்பஜன் சிங் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

என்ன ஆர்சிபி இந்த டிரிப் அடி கொஞ்சம் ஓவரோ - கலாய்த்த ஹர்பஜன் சிங்
பெங்களூருவின் தொடக்க வரிசை பேட்ஸ்மேன்களை அலற வைத்த ஹர்பஜன் சிங்.
  • News18
  • Last Updated: March 24, 2019, 7:36 AM IST
  • Share this:
என்ன ஆர்சிபி இந்த டிரிப் அடி கொஞ்சம் ஓவரோ என்று சென்னை அணியின் ஹர்பஜன் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

12-ஐபிஎல் சீசன் தொடர் சென்னையில் நேற்று கோலாகலமாக தொடங்கியது. முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி மோதியது. டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது சென்னை அணி. பெங்களூரு அணியின் தொடக்க வீரர்களாக கேப்டன் விராட் கோலி, விக்கெட் கீப்பர் பார்த்திவ் பட்டேல் களமிறங்கினர்.

சென்னை அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல், அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுக்க, பெங்களூரு அணி 70 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக பார்த்திவ் பட்டேல் 29 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.


71 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய சென்னை அணி 17.1 ஓவரில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து வெற்றி பெற்றது. முதல் போட்டியை வெற்றியுடன் தொடங்கியுள்ளது சென்னை அணி. 4 ஓவர்கள் வீசி 20 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்திய ஹர்பஜன் சிங் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.சென்னை அணி வெற்றி பெற்றதையடுத்து அந்த அணியின் ஹர்பஜன் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில், 'ஹர்பஜன் சிங் னா டர்பன் கட்டிட்டு தமிழ்ல ட்வீட் போட்டு இருபேன்னு நெனச்சியா. பஜ்ஜி டா போய் பழைய ஐபிஎல் ரெகார்ட் எடுத்து பாரு. பவர்புல் பீபுல் கம்ஸ் பிரம் பவர்புல் பிலேசஸ் சோ இஸ் சென்னை. என்ன ஆர்சிபி இந்த டிரிப் அடி கொஞ்சம் ஓவரோ! ரோல்லிங் சார்! தந்தானி நானே தானி தந்தானோ’ என்று பதிவிட்டுள்ளார்.Also watch

First published: March 24, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்