‘தலைநகரம் முழுதும் தல நகரமாய்’ - டெல்லி அணியை கிண்டலடித்த ஹர்பஜன் சிங்!

26 பந்துகளில் 44 ரன்கள் எடுத்த சென்னை அணி வீரர் வாட்சன் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

news18
Updated: March 27, 2019, 10:14 AM IST
‘தலைநகரம் முழுதும் தல நகரமாய்’ - டெல்லி அணியை கிண்டலடித்த ஹர்பஜன் சிங்!
ஐபிஎல்
news18
Updated: March 27, 2019, 10:14 AM IST
டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்றதையடுத்து அந்த அணியின் ஹர்பஜன் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழில் பதிவிட்டுள்ளார்.

டெல்லி கேபிடல்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான லீக் போட்டி டெல்லியில் நேற்று நடைபெற்றது. டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 147 ரன்களை எடுத்தது. சென்னை அணி சார்பில் ப்ராவோ 3 விக்கெட்டுகளையும், சாஹர், ஜடேஜா, இம்ரான் தாஹிர் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

இதையடுத்து களமிறங்கிய சென்னை வீரர் வாட்சன் நிதானமாக விளையாடி 44 ரன்கள் சேர்த்தார். இறுதியில் சென்னை அணி 19.4 ஓவரில் இலக்கை எட்டி வெற்றி பெற்றது. சென்னை அணியில் வாட்சன் 44 ரன்களும், ரெய்னா 30 ரன்களும், தோனி 32 ரன்களும் எடுத்தனர்.


ஏற்கனவே பெங்களூரு அணிக்கு எதிரான போடியில் வெற்றி பெற்ற நிலையில், நேற்றைய போட்டியிலும் வெற்றி பெற்று 4 புள்ளிகளுடன் பட்டியலில் முதல் இடத்தை பிடித்தது.

26 பந்துகளில் 44 ரன்கள் எடுத்த வாட்சன் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.சென்னை அணியின் வெற்றி குறித்து ஹர்பஜன் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘வரவேற்றது வேணும்னா நீங்களா இருக்கலாம் ஆனா வழியனுப்பி வைக்கிறது எப்பவுமே நாங்கதான் காற்றைக்கிழித்து பறக்கும் என் சென்னை சூப்பர் கிங்ஸ் கொடி நிழலில் டெல்லி கேபிடல்ஸ் இளைப்பாற தலைநகரம் முழுதும் தல நகரமாய் வெற்றி முழக்கத்தில் ஆர்பரிக்க #DCvsCSK டில்லிக்கு நீ பாதுஷான்னா மெட்றாசுக்கு நான் கபாலி’ என்று பதிவிட்டுள்ளார்.Also watch

First published: March 27, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...