Home /News /sports /

ஆஸி.யை வெல்ல கோலிக்கு ஹர்பஜன் சிங் அறிவுரை

ஆஸி.யை வெல்ல கோலிக்கு ஹர்பஜன் சிங் அறிவுரை

ஹர்பஜன் சிங் மற்றும் விராட் கோலி.

ஹர்பஜன் சிங் மற்றும் விராட் கோலி.

#HarbhajanSingh wants #Rishabh Pant in Indian squad | அடைந்தது. மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சரியாக விளையாடததால் 289 ரன்கள் இலக்கை எட்ட முடியாமல் இந்தியா தோல்வி அடைந்தது.

  • News18
  • Last Updated :
    ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் வெற்றி பெற கேப்டன் விராட் கோலிக்கு, மூத்த வீரர் ஹர்பஜன் சிங் அறிவுரை கூறியுள்ளார்.

    சிட்னியில் நடந்த ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சரியாக விளையாடததால் 289 ரன்கள் இலக்கை எட்ட முடியாமல் இந்தியா தோல்வி அடைந்தது.

    India Vs Australia, இந்தியா Vs ஆஸ்திரேலியா
    ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. (ICC)


    தொடக்க வீரர் ரோகித் சர்மா மற்றும் மகேந்திர சிங் தோனி ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 4 ரன்னுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தவித்த இந்திய அணி 141 ரன்கள் வரை விக்கெட்டை இழக்கமால் இந்த ஜோடி பார்த்துக்கொண்டது. ரோகித் சர்மா சதமும், தோனி 96 பந்துகளில் 51 ரன்களும் எடுத்தனர்.

    Dhoni, Rohit Sharma, ரோகித் சர்மா, தோனி
    ரோகித் சர்மா சதமும், தோனி 96 பந்துகளில் 51 ரன்களும் எடுத்தனர். (ICC)


    இந்த ஜோடி, 4-வது விக்கெட்டுக்கு 137 ரன்கள் சேர்த்தது. ஆனால், அடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தால் இந்தியா தோல்வி அடைந்தது. இந்நிலையில், இந்திய அணி வெற்றி பெற்ற ரிஷப் பண்ட் அணியில் சேர்க்க வேண்டும் என மூத்த வீரர் ஹர்பஜன் சிங் கூறியுள்ளார்.

    ரிஷப் பண்ட், Rishabh Pant
    டெஸ்டில் சதமடித்த மகிழ்ச்சியில் பேட்டை சுழற்றிய ரிஷப் பண்ட். (AP)


    “ஆஸ்திரேலியாவின் முன்னாள் அதிரடி பேட்ஸ்மேன் கில்க்றிஸ்ட் போன்ற திறமையைக் கொண்டவர் ரிஷப் பண்ட், 30 பந்துகளில் குறைந்தபட்சம் 6 சிக்சர்களாவது விளாசும் திறமை அவருக்கு உள்ளது. இது போட்டியை திசைதிருப்பும். மிடில் ஆர்டரில் ரிஷப் சேர்க்கப்பட வேண்டும். அதே நேரத்தில் 2019 உலகக்கோப்பை தொடருக்குள் தோனி, தனது பழைய பார்ம்-க்கு வர வேண்டும்” என்று அவர் தெரிவித்தார்.

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில், ரிஷப் பண்ட் சதம் அடித்து அசத்தினார். அத்துடன், விக்கெட் கீப்பராகவும் தன்னை நிரூபித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    சர்ச்சை பேச்சு: ஸ்பான்சரை பறிகொடுத்த ஹர்திக் பாண்டியா!

    Also Watch...

    Published by:Murugesan L
    First published:

    Tags: Harbhajan Singh, India vs Australia, Rishabh pant, Virat Kohli

    அடுத்த செய்தி