"நீ தோத்துட்டன்னு இந்த உலகமே சொன்னாலும்": அஜித் வசனத்தில் அசத்திய ஹர்பஜன் சிங்

4 ஓவர்கள் வீசி 17 ரன்கள் மட்டுமே கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்ந்த்திய ஹர்பஜன் சிங் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்

ஹர்பஜன் சிங்
  • News18
  • Last Updated: April 7, 2019, 11:38 AM IST
  • Share this:
பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்ற பிறகு ஹர்பஜன் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில் வெற்றி குறித்து பதிவிட்டுள்ளார்.

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் - கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதிய லீக் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில், டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த சென்னை அணியில், தொடக்க வீரர் வாட்சன் 26 ரன்களில் ஆட்டமிழந்தார். மறுமுனையில் பொறுப்பாக ஆடிய டுபிளெசிஸ் அரைசதம் கடந்தார். கடைசிக் கட்டத்தில், தோனி மற்றும் அம்பத்தி ராயுடு சற்று அதிரடியாக ஆடியதால், சென்னை அணியி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 160 ரன்கள் எடுத்தது.

இதையடுத்து களமிறங்கிய பஞ்சாப் அணி வீரர்கள் கிறிஸ் கெய்ல் மற்றும் மயங்க் அகர்வால் தொடக்கத்திலேயே ஆட்டமிழந்தனர். எனினும் அந்த அணியின் ராகுல், சர்ஃபராஜ் கான் சிறப்பாக விளையாடி அரைசதம் கடந்தனர். இருப்பினும் 20 ஓவர் முடிவில் பஞ்சாப் அணி 138 ரன்கள் மட்டுமே சேர்த்தது. இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதுவரை 5 போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை அணி 4 போட்டிகளில் வெற்றி பெற்று 8 புள்ளிகளுடன் பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளது.


4 ஓவர்கள் வீசி 17 ரன்கள் மட்டுமே கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்ந்த்திய ஹர்பஜன் சிங் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்



இதையடுத்து ஹைர்பஜன் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘நீ தோத்துட்டன்னு இந்த உலகமே சொன்னாலும், நம்ப வேண்டியது உலகத்த இல்ல உன்ன மட்டும் தான். நான் என்ன நம்புனேன் அத தாண்டி என் நண்பன் தோனி, சென்னை சூப்பர் கிங்ஸ், சிஎஸ்கே ரசிகர்கள் என்ன நம்புறாங்க. அதுக்கு கைமாறா வெற்றி ஓரம்கட்டகட்டதான் வெறித்தனம் எவியா ஏறும் சந்தோஷத்துல அழுகுறேன் நன்றி’ என்று பதிவிட்டுள்ளார்.



ஜூனியர் வாட்சனுடன் ஓட்டப் பந்தயத்தில் போட்டி போட்ட தோனி

ஹைத்ராபாத்துக்கு இப்படி ஒரு நிலையா?

முதல் போட்டியிலேயே அடித்து நொறுக்கிய மும்பை வீரர்!

 




தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.





ஐ.பி.எல் தகவல்கள்

POINTS TABLE:


ORANGE CAP:


PURPLE CAP:


RESULTS TABLE:


SCHEDULE TIME TABLE:


Also watch

First published: April 7, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading