இந்திய லெஜண்ட் ஆஃப் ஸ்பின்னர் ஹர்பஜன் சிங் அனைத்து கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு அறிவிக்கவுள்ளார். அவருக்கு வயது 41. விரைவில் ஐபிஎல் அணி ஒன்றின் பயிற்சியாளராகப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஐபிஎல் 2022- தொடரின் போது ஐபிஎல் அணிகள் இரண்டு ஹர்பஜன் சிங்கை பயிற்சியாளராக நியமிக்க அவரை அணுகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 2021 சீசனில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் ஆடினார் ஹர்பஜன். கிரிக்கெட்டுக்கு பிரியாவிடை கொடுக்க முடிவெடுத்துள்ளார். கொல்கத்தா அணி ஹர்பஜனை அவரது அடிப்படை விலையான ரூ.2 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. மோர்கன் தலைமை அணிக்கு 3 போட்டிகளில் மட்டுமே தலையைக் காட்டினார் ஹர்பஜன்.
பிடிஐ செய்திகளின் படி அனைத்து கிரிக்கெட்டிலிருந்தும் ஹர்பஜன் விடை பெறுகிறார். இவர் ஏதோ ஒரு ஐபிஎல் அணிக்கு மெண்ட்டார், அல்லது ஆலோசகர் அல்லது பயிற்சியாளர் குழுவில் பிரதான அங்கம் வகிப்பார். அதற்கான பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. ஐபிஎல் மெகா ஏலத்தில் ஏல மேஜையில் ஹர்பஜனை பார்த்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் வருண் சக்ரவர்த்தி, குல்தீப் யாதவுக்கு நிறைய ஆலோசனைகளை வழங்கியுள்ளார். எப்போதும் தன் அனுபவத்தை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ள விருப்பமுள்ளவர் ஹர்பஜன்.
Also Read: IND vs SA | சொதப்பும் ரஹானேவுக்காக வாதாடும் கோலி- இதே கரிசனம் அஸ்வின் மீது ஏன் இல்லை?
ஐபிஎல் கிரிக்கெட்டில் 13 சீசன்களில் 163 போட்டிகளில் ஆடிய ஹர்பஜன் சிங் 150 விக்கெட்டுகளை எடுத்துள்ளார், மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், கேகேஆர் அணிகளுக்கு ஹர்பஜன் ஆடியுள்ளார். ஒருமுறை 18 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றியது இவரது ஐபிஎல் சிறந்த பந்து வீச்சாகும்.
இதையும் படிங்க: அதிசயம் ஆனால் உண்மை: டெஸ்ட் கிரிக்கெட்டில் இப்படியும் நடக்குமா?
ஹர்பஜன் இந்திய அணிக்காக டெஸ்ட்டில் 417 விக்கெட்டுகளையும் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் 269 விக்கெட்டுகளையும் டி20 சர்வதேசப் போட்டிகளில் 25 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார். டெஸ்ட் பேட்டிங்கில் 2223 ரன்களை 2 சதங்கள் 9 அரைசதங்களுடன் எடுத்துள்ளார். ஒருநாள் சர்வதேச போட்டிகளில் 1237 ரன்களை எடுத்துள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Harbhajan Singh, IPL