இந்திய அணிக்காக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாட ரெடி - ஹர்பஜன் சிங்

ஐ.பி.எல் தொடரில் தொடர்ந்து சிறப்பாக விளையாடுவதால் இந்திய அணிக்காக விளையாடவும் தயாராக இருக்கிறேன் என்று ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.

இந்திய அணிக்காக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாட ரெடி - ஹர்பஜன் சிங்
ஹர்பஜன் சிங்
  • Share this:
இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் வாய்ப்பு கிடைக்கததால் ஐ.பி.எல் தொடரில் மட்டும் விளையாடி வருகிறார். சமீபத்தில் கிரிக் இன்போ இணையத்திற்கு அவர் அளித்த பேட்டியில், “என்னால் ஐ.பி.எல் போட்டியில் சிறப்பாக பந்து வீச முடிகிறது. உலகின் டாப் பேட்ஸ்மேன்களை எனது பந்துவீச்சால் வீழ்த்தி உள்ளேன்.

ஐ.பி.எல் தொடரில் பவர் பளே மற்றும் மிட் ஓவர்களில் பந்துவீசி உள்ளேன். டேவிட் வார்னர், பேரிஸ்டோவ் போன்றவர்களை வீழ்த்தி உள்ளேன். ஐ.பி.எல் தொடரில் என்னால் விக்கெட் எடுக்க முடியும் என்றால் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் என்னால் விக்கெட் எடுக்க முடியாது என்று நினைக்கிறீர்களா?

ஆனால் இந்திய அணியில் ஆடுவது எனது கையில் இல்லை. ஒரு வேளை தேர்வாளர்கள் எனக்கு வயதாகி விட்டது என்று கூட நினைக்கலாம். நான் தற்போதும் இந்திய அணிக்காக சர்வதேச கிரிக்கெட் போட்டியில் விளையாட தயராக உள்ளேன்“ என்றுள்ளார்.First published: May 25, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading