Home /News /sports /

யார் அந்த ஜர்னலிஸ்ட்?- பேரைச் சொல்லுங்க சஹா- ஹர்பஜன், சேவாக் கொதிப்பு

யார் அந்த ஜர்னலிஸ்ட்?- பேரைச் சொல்லுங்க சஹா- ஹர்பஜன், சேவாக் கொதிப்பு

சாஸ்திரி-சஹா

சாஸ்திரி-சஹா

இந்திய டெஸ்ட் அணியிலிருந்து நீக்கப்பட்டவுடன் சஹாவிடம் பேட்டி கேட்டு தொந்தரவு செய்த பத்திரிகையாளர் யார் என்றும் அவரது பெயரை வெளியிடவும், பிசிசிஐ தலையிட வேண்டும் என்றும் கடும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன.

    இந்திய டெஸ்ட் அணியிலிருந்து நீக்கப்பட்டவுடன் சஹாவிடம் பேட்டி கேட்டு தொந்தரவு செய்த பத்திரிகையாளர் யார் என்றும் அவரது பெயரை வெளியிடவும், பிசிசிஐ தலையிட வேண்டும் என்றும் கடும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன.

    முன்னாள் இந்திய ஆஃப் ஸ்பின்னர் ஹர்பஜன் சிங் ஞாயிற்றுக்கிழமை, மிரட்டிய பத்திரிகையாளரின் பெயரை விக்கெட் கீப்பர்-பேட்டர் விருத்திமான் சாஹா வெளியிட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் வீரேந்தர் சேவாக் சாஹாவை ஆதரித்து, 'அந்த ‘மதிப்புக்குரிய’ பத்திரிகையாளர் ஒரு நல்ல பத்திரிகையாளராக இருக்க முடியாது என்றும் ‘சம்ச்சாகிரி’ பத்திரிகையாளராகவே இருக்க வேண்டும் என்றும் சாடியுள்ளனர்.

    “விரித்திமான்சஹா நீங்கள் அந்த நபருக்கு பெயரிடுங்கள், இதனால் கிரிக்கெட் சமூகம் இதுபோன்று செயல்படுபவர்களை அறியும். இல்லாவிட்டால் நல்ல பத்திரிகையாளர்கள் மீதும் சந்தேகம் ஏற்படும். இது என்ன பத்திரிக்கை தர்மம்? @BCCI @Wriddhipops @JayShah @SGanguly99 @ThakurArunS வீரர்கள் பாதுகாக்கப்பட வேண்டும்" என்று ஹர்பஜன் ட்விட்டரில் எழுதினார்.

    முன்னாள் இந்திய இடது கை வேகப்பந்து வீச்சாளர் ஆர்.பி.சிங்கும் சாஹாவுக்கு ஆதரவாக ட்வீட் செய்துள்ளார். “பிசிசிஐ அல்லது கிரிக்கெட் வீரர்களைப் பற்றி பேசும்போது, ​​எல்லா பத்திரிகையாளர்களிடமிருந்தும் பல ‘ஆதாரங்களை’ கேட்கிறோம். சஹாவை மிரட்டிய இந்த பத்திரிக்கையாளர் யார் என்று ஒரு ஆதாரம் சொல்ல முடியுமா?

    இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவர் சவுரவ் கங்குலி இந்த விவகாரத்தை கையாள வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி வலியுறுத்தியுள்ளார். “ஒரு வீரர் ஒரு பத்திரிகையாளரால் அச்சுறுத்தப்படுவது அதிர்ச்சியளிக்கிறது. அப்பட்டமான பதவி துஷ்பிரயோகம். #TeamIndia-வில் அடிக்கடி நடக்கும் ஒன்று. பிசிசிஐ தலைவர் இதில் தலையிட வேண்டிய நேரம் வந்து விட்டது. ஒவ்வொரு கிரிக்கெட் வீரரின் நலன்களையும் கருத்தில் கொண்டு அந்த நபர் யார் என்பதைக் கண்டறியவும். இது அல்டிமேட் டீம் மேன் சஹாவிடம் இருந்து வருவது தீவிரமானது.

    முன்னதாக ஞாயிற்றுக்கிழமை காலை, சேவாக்கும் விருத்திமான் சஹாவுக்கு ஆதரவாக ட்வீட் செய்தது குறிப்பிடத்தக்கது.
    Published by:Muthukumar
    First published:

    Tags: Harbhajan Singh, Ravi Shastri, Wriddhiman Saha

    அடுத்த செய்தி