• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • வழி தவறிய ஆமீருக்காக நீங்கள் இதை கட்டாயம் செய்ய வேண்டும் இம்ரான் - கோரிக்கை வைத்த ஹர்பஜன்

வழி தவறிய ஆமீருக்காக நீங்கள் இதை கட்டாயம் செய்ய வேண்டும் இம்ரான் - கோரிக்கை வைத்த ஹர்பஜன்

ஆமிர்-ஹர்பஜன் இடையே கடும் வாக்குவாதம்

ஆமிர்-ஹர்பஜன் இடையே கடும் வாக்குவாதம்

  • Share this:
    டி20 உலகக்கோப்பையில் பாகிஸ்தான் இந்தியாவை நோ-லாஸில் வென்றதையடுத்து இருதரப்பிலும் வார்த்தை மோதல் ஏற்பட்டுள்ளன, குறிப்பாக ஹர்பஜன் சிங், பாகிஸ்தான் இடது கை வேகப்பந்து வீச்சளர் முகமது ஆமிர் இருவரும் அசிங்கமாகச் சண்டை போட்டுக் கொண்டனர். இந்நிலையில்தான் பாகிஸ்தான்பிரதமர் இம்ரான் கானுக்கு இந்திய வீரர் ஹர்பஜன் சிங் விநோத கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார்.

    ஆமிர், ஹர்பஜன் சிங்கை அப்ரீடி அடித்த சிக்சர்கள் வீடியோவை போட்டு வம்பிழுக்க இவர் ஆமிரை நீ ஒரு சூதாடி, நாட்டை காட்டிக்கொடுத்தவன் என்றெல்லாம் சாடி நாடக அரங்கேற்றம் ட்விட்டரில் நடந்தேறியது. இப்போது அதை அதோடு விடாமல் ஹர்பஜன் சிங் ஆஜ் தக் டிவியில் கூறும்போது, ‘பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், முகமது ஆமிர் போன்ற வழிதவறிப்போன குழந்தைகளுக்காக பள்ளிக்கூடம் திறக்க வேண்டும்’என்று வேண்டுகோள் வைப்பதாகத் தெரிவித்தார்.

    “ஆமிர் போன்ற குழந்தைகளுக்காக பிரதமர் இம்ரான் கான் ஸ்கூல்களைத் திறக்க வேண்டும், அதில் மூத்தோரிடம் எப்படி பேசுவது என்பதைக் கற்றுத் தர வேண்டும் இங்கு நாங்கள் எங்கள் குழந்தைகளுக்கு மூத்தோரை மதிப்பது எப்படி என்று கற்றுக் கொடுக்கிறோம். இன்று கூட வாசிம் அக்ரம் போன்ற மூத்த வீரர்களுடன் நாங்கள் மரியாதையாகப் பேசுகிறோம்.

    ஆமிர் போன்றவருக்கு யாரிடம் எப்படிப் பேசுவது என்ன பேசுவது என்று தெரியவில்லை. தன் நாட்டையே விற்ற ஒருவரிடம் போய் நான் பேசியிருக்கவே கூடாது. நானும் ஷோயப் அக்தரும் கலகலப்பாக மோதிக்கொள்வோம் அதுவே நாங்கள் நீண்ட காலம் பழகிய பிறகு ஏற்பட்டதுதான். இருவரும் சேர்ந்து நிறைய ஷோக்களில் பங்கேற்றுள்ளோம். எங்களுக்கிடையே புரிதல் உள்ளது.

    முகமது ஆமிர் யார்? லார்ட்ஸில் மேட்ச் பிக்சிங் அதே நபர்தானே இவர்? அவர் மீதான நம்பகத்தன்மை என்ன? நாட்டுக்காக 10 போட்டிகளில் ஆடியிருப்பார், ஆனால் அதற்காக பணத்துக்காக நாட்டையே விற்று விட்டார்.” என்று ஹர்பஜன் பொரிந்து தள்ளிவிட்டார்.

    ஆமிர், முகமது ஆசிப், சல்மான் பட் மூவரும் ஸ்பாட் பிக்சிங்கில் சிக்கி இங்கிலாந்தில் சிறை தண்டனை பெற்று திரும்பிவந்தவர்கள். 2016-ல் ஆமீரை மீண்டும் பாகிஸ்தான் அணிக்குள் சேர்த்தது, இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர். 2020-ல் மன உளைச்சல் காரணமாக சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு அறிவித்தார்.

    ஆனால் ஆசிப், ஆமிரெல்லாம் என்ன பவுலர்கள் தெரியுமா? அவர்களின் பேராசையே அவர்களின் பேரழிவுக்குக் காரணமாகின.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: