Home /News /sports /

உங்கள் கோச்சிங்கில், கோலியின் கேப்டன்சியில் 3 ஆண்டுகளாக பேட்டர்கள் என்ன கிழித்தார்கள்?- ரவி சாஸ்திரிக்கு ஹர்பஜன் கேள்வி

உங்கள் கோச்சிங்கில், கோலியின் கேப்டன்சியில் 3 ஆண்டுகளாக பேட்டர்கள் என்ன கிழித்தார்கள்?- ரவி சாஸ்திரிக்கு ஹர்பஜன் கேள்வி

 ஹர்பஜன்

ஹர்பஜன்

விராட் கோலி வெற்றி மேல் வெற்றி பெற்று இந்தியாவின் தலைசிறந்த கேப்டனாவதை சிலர் விரும்பவில்லை என்று ரவிசாஸ்திரி உளறல் கருத்து ஒன்றைக் கூற. அதற்கு பலரும் எதிர்வினையாற்றி வருகின்றனர், மஞ்சுரேக்கர், ‘ரவி சாஸ்திரி கருத்து அறிவார்த்தமாக இல்லை, ஏதோ உள்நோக்கத்துடன் கோலியை ஆதரிக்கிறார்’ என்று கூற ஹர்பஜன் இன்னும் ஒரு படிமேலே சாஸ்திரியின் பயிற்சிக் காலக்கட்டத்தையே கேள்விக்குட்படுத்தியுள்ளார்.

மேலும் படிக்கவும் ...
    விராட் கோலி வெற்றி மேல் வெற்றி பெற்று இந்தியாவின் தலைசிறந்த கேப்டனாவதை சிலர் விரும்பவில்லை என்று ரவிசாஸ்திரி உளறல் கருத்து ஒன்றைக் கூற. அதற்கு பலரும் எதிர்வினையாற்றி வருகின்றனர், மஞ்சுரேக்கர், ‘ரவி சாஸ்திரி கருத்து அறிவார்த்தமாக இல்லை, ஏதோ உள்நோக்கத்துடன் கோலியை ஆதரிக்கிறார்’ என்று கூற ஹர்பஜன் இன்னும் ஒரு படிமேலே சாஸ்திரியின் பயிற்சிக் காலக்கட்டத்தையே கேள்விக்குட்படுத்தியுள்ளார்.

    யாருக்கு கோலியின் வெற்றி பிடிக்கவில்லை என்று ரவி சாஸ்திரி கூறுகிறார் என்று தெரியவில்லை என்று கூறும் ஹர்பஜன், எல்லோருக்கும்தான் வெற்றி என்பது பிடிக்கும், ரவிசாஸ்திரி ஏதோ உளறுகிறார் என்கிறார் ஹர்பஜன் சிங்.

    ஸ்போர்ட்ஸ் டாக்கில் ஹர்பஜன் கூறியதாவது: “இது ஒரு அலட்சியமான கருத்து - விராட் கோலி மேலும் 15-20 டெஸ்ட் போட்டிகளில் வென்று இந்தியாவின் வெற்றிகரமான கேப்டனாக தனது பாரம்பரியத்தை மேம்படுத்தியிருந்தால் மக்கள் இதை ஜீரணிக்க மாட்டார்கள் என்று ரவி சாஸ்திரி கூறுகிறார். அவர் யாரைப் பற்றி பேசுகிறார் என்று எனக்குத் தெரியவில்லை. யார்தான் ஜீரணித்திருக்க மாட்டோம், ஆனால் இந்தியர்களாகிய நாங்கள் அதைப் பற்றி மிகவும் பெருமைப்பட்டிருப்போம். அவர் இன்னும் 40 டெஸ்ட்களை வென்று, அதைச் சமாளிக்க மற்றொரு இந்திய கேப்டன் இரண்டு முறை கேப்டனாக வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்பதை நாங்கள் விரும்புவோம்.

    இந்தியாவில் நடக்க இருக்கும் போட்டிகள், அவற்றின் முடிவுகள் உங்களுக்கு சாதகமாக அமையும் என்பதை முன்கூட்டியே தீர்மானிக்க முடியாது. ஆம், நீங்கள் சில சிறந்த தொடர்களைக் கொண்டிருந்தீர்கள், அங்கு நீங்கள் மிகவும் வெற்றிகரமாக இருந்தீர்கள், ஆனால் முன்னோக்கிச் செல்லும்போது, ​​அந்த போட்டிகளை கோஹ்லி வென்றிருப்பாரா என்பது காலம் மட்டுமே சொல்லியிருக்கும் ஒன்று. ராகுல் டிராவிட் பயிற்சியாளராக இருப்பதால், முதல் ஓவரில் இருந்து பந்து சுழலும் பரப்புகளில் இந்தியா விளையாடும் என்று நான் நினைக்கவில்லை. உண்மையில், பேட்டிங் செய்பவர்களுக்கும் தங்களை நிரூபிக்க நியாயமான வாய்ப்பு கிடைக்கும் ஆடுகளங்கள் இருக்கும் என்று நான் நினைக்கிறேன்.

    மேலும், கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளில், இந்திய பேட்டர்களின் புள்ளிவிவரங்களை எடுத்துப் பார்த்தால், ஒருவேளை அவர்களுக்கு ரன்களை எப்படி எடுப்பது என்று தெரியவில்லை என்பதை நீங்கள் பார்க்கலாம். எங்கள் பேட்ஸ்மேன்கள் எப்படி ரன் எடுக்க வேண்டும் என்பதை மறந்துவிட்டனர். கடந்த 2-3 ஆண்டுகளாக அதிக ரன்கள் எடுக்காததால் பேட்டர்களின் நம்பிக்கை குறைந்துள்ளது. மேலும் ரன்கள் இல்லாத போது, ​​வீரர்கள் அழுத்தத்தில் உள்ளனர். நீங்கள் சொந்த மண்ணில் தொடரை வெல்கிறீர்கள் ஆனால் உங்கள் வீரர்கள் வளரவில்லை.”

    ஹர்பஜன் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை, மைக்கேல் மதன காமராஜன் படத்தில் ஒரு வசனம் வரும், ‘நான் வளர்த்தேன் நீ வளரல்லியே’ என்று அதே போல்தான் ஹர்பஜன் கேட்பதும், நீங்களும் கோலியும் வளர்ந்தீர்கள் சாஸ்திரி, பேட்ஸ்மென்கள் வளரவில்லையே என்றுதான் ஹர்பஜன் கேட்கிறார், பவுலிங்கினால் வென்றோம், அதுவும் பவுலிங்கில் கோச்சின் பங்கு ஒன்றுமில்லை நாங்களாகவே ஒரு அணியாக அமைத்துக் கொண்டு நாங்களே களத்தில் எடுக்கும் முடிவுதான் வேகப்பந்து வளர்ச்சிக்குக் காரணம் என்று கோலியையும் ரவிசாஸ்திரியின் பங்கை ஒருசேர ஷமி கேள்விக்குட்படுத்தியதும் நினைவு கூரத்தக்கது.
    Published by:Muthukumar
    First published:

    Tags: Harbhajan Singh, Ravi Shastri, Virat Kohli

    அடுத்த செய்தி