கிரிக்கெட் பயணத்தை மகுடம் ஏந்தி நிறைவு செய்வாரா தோனி...?

டி20 உலகக்கோப்பை, ஒருநாள் உலகக்கோப்பை, சாம்பியன் டிராபி ஆகியவற்றை வென்ற ஒரே கேப்டன் என்ற அசைக்க முடியாத சாதனைக்கு தோனி சொந்தக்காரரானார்.

கிரிக்கெட் பயணத்தை மகுடம் ஏந்தி நிறைவு செய்வாரா தோனி...?
சாதனைக்கே பிடித்த சாதனையாளனாக தனது 37 வது வயதிலும் களமாடி வருகிறார் தோனி
  • News18
  • Last Updated: July 7, 2019, 8:37 AM IST
  • Share this:
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரரான மகேந்திர சிங் தோனி, தனது 38-வது வயதில் காலடி எடுத்து வைத்துள்ளார். தலைசிறந்த வீரர்களின் ஒருவரான தோனி, கிரிக்கெட்டில் தடம் பதித்த சாதனைகளை நினைவு கூறலாம்.

மகேந்திர சிங் தோனி... கடந்த 15 ஆண்டுகளாக கிரிக்கெட்டில் தவிர்க்க முடியாத சக்தியாக உலா வருகிறார். இந்திய அணியின் வெற்றிக் கேப்டனாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டவர். இவரின் தலைமையில், டி-20 உலக கோப்பை, ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பை, மினி உலக கோப்பை மற்றும் டெஸ்ட் போட்டியில் முதல் முறையாக முதலிடம் என இந்திய அணியை உலக அளவில் பெருமிதம் கொள்ளச் செய்தவர்.

விக்கெட்கீப்பர் பேட்ஸ்மேனான தோனி, அதிரடி பேட்டிங், மின்னல் வேக ஓட்டம், கண் இமைக்கும் நொடிக்குள் ஸ்டெம்பிங் ஆகியவற்றால் கிரிக்கெட் ரசிகர்களால் கொண்டாடப்படுகிறார்...


2007-ம் ஆண்டு ராகுல் டிராவிட்டுக்குப் பின் இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியை வழி நடத்தும் பொறுப்பு இவரை தேடி வந்தது. அதே ஆண்டு இலங்கை, நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான தொடரை இந்தியா வென்றது. இதன் தொடர்ச்சியாக, அதே ஆண்டு நடைபெற்ற முதல் டி-20 உலக கோப்பையில் இந்திய அணி தோனி தலைமையில் களம் கண்டது. இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி மகுடம் சூடி வரலாறு படைத்தது.பின்னர் 2011 உலகக்கோப்பையையும் இந்தியாவுக்கு பெற்றுத்தந்து சாதனை நாயகனாக மாறினார் தோனி. 2014 சாம்பியன்ஸ் டிராபியிலும் இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது.

இதன் மூலம், டி20 உலகக்கோப்பை, ஒருநாள் உலகக்கோப்பை, சாம்பியன் டிராபி ஆகியவற்றை வென்ற ஒரே கேப்டன் என்ற அசைக்க முடியாத சாதனைக்கு தோனி சொந்தக்காரரானார்.

ஒருநாள் கிரிக்கெட் மற்றும் டி-20 கிரிக்கெட்டில் கொடி கட்டி பறந்த தோனி & கோ-வால், டெஸ்ட் போட்டி குறிப்பாக வெளிநாட்டு மைதானங்களில் கோலோச்ச முடியவில்லை. இதன் எதிரொலியாக, 2014 டிசம்பரில் டெஸ்ட் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகினார் தோனி.

மேலும், பேட்டிங்கிலும் முன்பு போன்று அதிரடி காட்ட முடியாமல் பின்னடைவை சந்தித்தார். 2015-ம் ஆண்டு நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதியில் இந்தியா தோல்வி கண்டது. அப்போதே, தோனியின் கேப்டன்ஷிப் விவாதப் பொருளானது.

சிறந்த ஃபினிஷர் என்று புகழப்படும் தோனி, அண்மைக் காலமாக தடுமாற்றத்தை சந்தித்து வருகிறார். இந்நிலையில், நடப்பு உலகக் கோப்பையுடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெறக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, தனது கிரிக்கெட் பயணத்தை மகுடம் ஏந்தி நிறைவு செய்வாரா தோனி?

First published: July 7, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading