Home /News /sports /

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்  ‘தல’ தோனி: 41 வயதுக்கு 41 அடி உயர கட் அவுட்- ரசிகர்கள் கொண்டாட்டம்

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்  ‘தல’ தோனி: 41 வயதுக்கு 41 அடி உயர கட் அவுட்- ரசிகர்கள் கொண்டாட்டம்

தோனி

தோனி

MS Dhoni : முன்னாள் இந்திய வெற்றிக் கேப்டன் தோனிக்கு 41 அடி கட்அவுட்டை வைத்து அகமகிழ்ந்துள்ளனர் அவரது ரசிகர்கள்.

    தோனிக்கு இன்று 41வது பிறந்த தினம், இதனை முன்னிட்டு விஜயவாடா மாவட்டத்தில், தோனி ரசிகர்கள், முன்னாள் இந்திய வெற்றிக் கேப்டன் தோனிக்கு 41 அடி கட்அவுட்டை வைத்து அகமகிழ்ந்தனர். நடிகர்களுக்குத்தான் கட் அவுட் வைக்க வேண்டுமா என்ன? இந்தியாவுக்காக 3 ஐசிசி கோப்பைகளை வென்ற தோனிக்கு வைப்பது சரிதானே என்கின்றனர் ரசிகர்கள்.

    நாட்டில் கிரிக்கெட் ஒரு திருவிழாவாக கொண்டாடப்படுவது உறுதி, இருப்பினும், இந்தியர்கள் தங்களுக்கு பிடித்த கிரிக்கெட் வீரரின் பிறந்தநாளில் இன்னும் உற்சாகமாக இருக்கிறார்கள். எம்எஸ் தோனி தனது பிறந்தநாளை ஜூலை 7 ஆம் தேதி கொண்டாடவிருப்பதால் ரசிகர்கள் ஏற்கனவே உற்சாகத்தில் உள்ளனர்.

    தோனியின் 41வது பிறந்த தினத்தையொட்டி அவரது நாளை இன்னும் மறக்க முடியாததாக மாற்ற ரசிகர்கள் முடிவு செய்தனர். விஜயவாடா மாவட்டத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) ரசிகர்கள், முன்னாள் இந்திய கேப்டனை கவுரவிக்கும் வகையில் 41 அடி பெரிய கட்அவுட்டை உருவாக்கினர்.



    2011 உலகக்கோப்பையில் அடித்த கடைசி வெற்றி சிக்சர் ஷாட்டின் கட் அவுட் தான் இது. கடந்த ஐபிஎல் தொடரில் மோசமாக ஆடி கடைசிக்குச் சென்ற சிஎஸ்கே 2023 ஐபிஎல் தொடரை எதிர்நோக்கியுள்ளது. அப்போது தீபக் சாஹர் அணிக்குத் திரும்புவார்.2023- தொடரிலும் சிஎஸ்கேவை தல தோனிதான் வழிநடத்துவார் போலிருக்கிறது.
    Published by:Muthukumar
    First published:

    Tags: Birthday, CSK, IPL, Mahendra singh dhoni, MS Dhoni, Sakshi dhoni

    அடுத்த செய்தி