Home /News /sports /

இந்திய அணி புறமொதுக்கிய குல்தீப் யாதவ்வுக்கு இன்று பிறந்த நாள்- 2 ஹாட்ரிக் சாதனை புரிந்தவர் இன்று எங்கே?

இந்திய அணி புறமொதுக்கிய குல்தீப் யாதவ்வுக்கு இன்று பிறந்த நாள்- 2 ஹாட்ரிக் சாதனை புரிந்தவர் இன்று எங்கே?

குல்தீப் யாதவ்வுக்கு இன்று பிறந்தநாள்

குல்தீப் யாதவ்வுக்கு இன்று பிறந்தநாள்

உத்தரப் பிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்தில் 1994ம் ஆண்டு டிசம்பர் 14ம் தேதி பிறந்தவர் குல்தீப் யாதவ். ஒருநாள் போட்டிகளில் மேட்ச் வின்னராகத் திகழ்ந்தார் குல்தீப் யாதவ்,

    சர்வதேச கிரிக்கெட்டில் 2 ஹாட்ரிக் சாதனை, ஒருநாள் சர்வதேச கிரிக்கெட்டில் 100 விக்கெட்டுகளை அதிவேகமாக எடுத்த இடது கை சைனமன் பவுலர் குல்தீப் யாதவ்வுக்கு இன்று பிறந்த நாள்.

    உத்தரப் பிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்தில் 1994ம் ஆண்டு டிசம்பர் 14ம் தேதி பிறந்தவர் குல்தீப் யாதவ். ஒருநாள் போட்டிகளில் மேட்ச் வின்னராகத் திகழ்ந்தார் குல்தீப் யாதவ், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அனில் கும்ப்ளே பயிற்சித்தலைமையின் கீழ் மார்ச் 25, 2017-ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டெஸ்ட் அறிமுகம் கண்டார்.

    2017 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் இந்தியாவை வீழ்த்தி கோப்பையை தட்டிச் சென்ற பிறகே குல்தீப் யாதவ், சாஹல் ஆட்சிதான். இருவரும் பல போட்டிகளை வென்று கொடுத்துள்ளனர். டெஸ்ட் போட்டியில் அறிமுக டெஸ்ட்டிலேயே ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஸ்பின் எடுக்காத மட்டை முதல் நாள் பிட்சில் ஆஸ்திரேலியாவை சுருட்டினார். சிட்னியில் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார்.

    கோலியின் கேப்டன்சி போதாமையினால் குல்தீப் யாதவை அவர் ஒழித்து ஜடேஜாவை தூக்கி விட்டார். குல்தீப் யாதவ் என்ற அயல்நாடுகளிலும், பேட்டிங் பிட்ச்களிலும் கூட விக்கெட்டுகளை வீழ்த்தும் வல்லமை பெற்ற ஒரு திறமையை அழித்ததில் கோலிக்கும் ரவிசாஸ்திரிக்கும் பங்கு உண்டு. இன்று பயிற்சிக்காலம் முடிந்த பிறகு ஆயிரத்தெட்டு உள்குத்து விவகாரங்களை வெளிப்படுத்தும் ரவிசாஸ்திரி குல்தீப் யாதவ் ஒழிப்புக்கு என்ன பதில் வைத்திருக்கிறார் என்று தெரியவில்லை, அவரிடம் யாரும் கேட்கவும் இல்லை.

    7 டெஸ்ட் போட்டிகளில் 26 விக்கெட்டுகள் என்பது ரிஸ்ட் ஸ்பின்னருக்கு மோசமான ரெக்க்கர்ட் அல்ல, தொடர்ந்து வாய்ப்பளிக்கப்படவில்லை. என்பதுதான் உண்மை. இன்று டி20, ஒருநாள் என்று அனைத்திலிருந்தும் அவர் காணாமல் போனதற்கு கோலிதான் பொறுப்பு. ஒருநாள் போட்டிகளில் குல்தீப் யாதவ்வின் சிக்கன விகிதம் என்ன தெரியுமா ஓவருக்கு 5.23 ரன்கள்தான். டி20-யில் சிக்கன விகிதம் 7.15தான். இப்போது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அவரை ஐபிஎல் -தொடரிலிருந்தும் கழற்றி விட்டுள்ளது. உண்மையில் பாவம். கொடுமைதான்.

    Also Read: ராகவேந்திராவின் த்ரோ டவுன் பயிற்சியில் ரோகித் சர்மா சீரியஸ் காயம்: ஒருநாள் தொடருக்கும் சந்தேகம்

    விராட் கோலி வேண்டுமானால் குல்தீப் யாதவுக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறலாம், ஆனால் அவரது பாழான கிரிக்கெட் கரியருக்கு பதில் அளிப்பார்களா கோலியும் அணித்தேர்வுக்குழுவும்? எது எப்படியோ பிறந்த நாள் காணும் குல்தீப் யாதவ்வை நாமும் வாழ்த்துவோம்.
    Published by:Muthukumar
    First published:

    Tags: Kuldeep Yadav

    அடுத்த செய்தி