ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

வீழ்வேன் என்று நினைத்தாயா?- பீனிக்ஸ் பறவை போல் மீண்டெழுந்த தாதா கங்குலி இரட்டைச் சதம் விளாசிய கதை!

வீழ்வேன் என்று நினைத்தாயா?- பீனிக்ஸ் பறவை போல் மீண்டெழுந்த தாதா கங்குலி இரட்டைச் சதம் விளாசிய கதை!

2002 லார்ட்ஸில் வெற்றிக்குப் பிறகு சட்டையை கழற்றி சுற்றிய கங்குலி

2002 லார்ட்ஸில் வெற்றிக்குப் பிறகு சட்டையை கழற்றி சுற்றிய கங்குலி

இந்திய கிரிக்கெட்டை 1999-ம் ஆண்டு அதன் சூதாட்ட சர்ச்சை அதன் பிறகான இழிவுகளிலிருந்து மீட்டு இந்திய அணிக்கு ஒரு மரியாதையையும் கவுரவத்தையும் மீட்டுத் தந்ததில் தாதா கங்குலியின் பங்கு மிக மிக அதிகம், அவர் எண்ணற்ற அரைசதங்க்கள் அடித்தாலும் இன்று வயதில் அரைசதம் அடித்த நாள். கங்குலியின் தீரா மன உறுதிக்கு பல உதாரணங்களை சுட்ட முடியும். அதில் சிலவற்றைப் பார்ப்போம்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :

இந்திய கிரிக்கெட்டை 1999-ம் ஆண்டு அதன் சூதாட்ட சர்ச்சை அதன் பிறகான இழிவுகளிலிருந்து மீட்டு இந்திய அணிக்கு ஒரு மரியாதையையும் கவுரவத்தையும் மீட்டுத் தந்ததில் தாதா கங்குலியின் பங்கு மிக மிக அதிகம், அவர் எண்ணற்ற அரைசதங்க்கள் அடித்தாலும் இன்று வயதில் அரைசதம் அடித்த நாள். கங்குலியின் தீரா மன உறுதிக்கு பல உதாரணங்களை சுட்ட முடியும். அதில் சிலவற்றைப் பார்ப்போம்.

இந்திய கிரிக்கெட்டை புரட்சிகரமாக மாற்றியவர் கங்குலி என்று கூறப்படுவதுண்டு, இவர்தான் சேவாகை டெஸ்ட் போட்டிகளில் தொடக்கத்தில் இறங்க வைத்து அவரை ஒரு பெரிய வீரராக உருமாற்றினார். யுவராஜ் சிங், ஜாகீர் கான், லஷ்மண், ஹர்பஜன், ஆஷிஷ் நெஹ்ரா, முகமது கைஃப் உள்ளிட்டவர்களைக் கொண்டு வந்து வெளிநாடுகளில் வென்று இந்திய அணியை வெளிநாட்டு அணிகள் மரியாதையாகப் பார்க்க வைத்தார், சச்சின் டெண்டுல்கர் தொடர்ச்சியாக ஆஸ்திரேலியாவில் 3 டெஸ்ட்கள் தோல்வி இங்கு வந்து தென் ஆப்பிரிக்காவிடம் 2-0 தோல்வி என்று 5 தொடர் தோல்விகளின் சமயத்தில்தான் கங்குலியிடம் கேப்டன்சி வந்தது.

2002-ல் லார்ட்ஸ் மைதானத்தில் இறுதியில் இங்கிலாந்தின் 324 ரன்கள் இலக்கை விரட்டி வெற்றிப் பெற்றதையடுத்து சட்டையைக் கழற்றி சுற்றி இங்கிலாந்துக்கு பதிலடி கொடுத்தார், காரணம், அதற்கு முந்தைய தொடரில் இங்கு பிளிண்டாப் தொடரை சமன் செய்ததற்கு தன் சட்டையை மும்பை மைதானத்தில் கழற்றி கொண்டாடினார், அதற்கு கங்குலி பதிலடி கொடுத்தார்.

அப்போதுதான் ஸ்டீவ் வாஹ் பெரிய கேப்டனாக டெஸ்ட் கிரிக்கெட் ஆட்டத்தின் போக்கையே புரட்சிகரமாக மாற்றியிருந்தார்.2003 உலகக்கோப்பையில் ஆஸ்திரேலியாவிடம் முதல் போட்டியில் கேவலமாகத் தோற்றபோது இந்திய வீரர்கள் வீட்டில் கற்கள் பறந்தன, மக்கள் கொதிப்படைந்தார்கள், ஆனால் அணியை மாற்றாமல் அதே அணியை வைத்துக் கொண்டு அதன் பிறகு ஒரு போட்டியில் கூட தோற்காமல் இறுதிக்கு வந்து அப்போதும் ஆஸ்திரேலியாவிடம் தான் தோற்றார். ஆனால் அது ஒரு பெரிய பயணம்.

தொடர்ச்சியாக 16 டெஸ்ட் போட்டிகளில் வென்று இங்கு வந்து சாதனை சமன் மும்பை டெஸ்ட் வெற்றியையும் பெற்று 17 என்று ஸ்டீவ் வாஹ் கொட்டம் பெரிய கொட்டமாக இருந்தது, அப்போதுதான் கொல்கத்தாவில் அந்த மாரத்தான் பாலோ ஆன் இன்னிங்சில் லஷ்மணும், திராவிடும் 2வது இன்னிங்ஸில் ரெக்கார்ட் பார்ட்னர்ஷிப் அடிக்க, இந்தியா அந்த டெஸ்ட் போட்டியை வென்று ஆஸ்திரேலியா ஸ்டீவ் வாஹ் கொட்டத்துக்கு செக் வைத்ததோடு 3வது சென்னையில் நடைபெற்ற நெருக்கமான டெஸ்ட்டிலும் இந்தியா வென்று தொடரை 2-1 என்று கைப்பற்றியது, அதுமுதல் ஆஷஸ் தொடருக்கு அடுத்த படியாக சுவாரசியமானது பார்டர்-கவாஸ்கர் டிராபிதான் என்று கதையாடலையே மாற்றினார் சவுரவ் கங்குலி. 2004-ல் ஆஸ்திரேலியாவுக்கு சென்று பிரிஸ்பனில் எந்த இந்திய வீரருக்கும் லபிக்காத சதத்தை அடித்து அங்கு டிரா செய்து பிறகு தொடரையே ட்ரா செய்து ஸ்டீவ் வாஹின் கனவு இறுதித் தொடர் வெற்றிக்கு முட்டுக்கட்டைப் போட்டார்.

கிரெக் சாப்பல் காலக்கட்டம்:

2004-ல் ஆஸ்திரேலியா இங்கு வந்த போது நாக்பூர் டெஸ்ட் போட்டியில் கடைசி நேரத்தில் தான் ஆடவில்லை என்று விலகினார்

இந்தியா தோற்றது பெரிய சர்ச்சையில் சிக்கினார். அதோடு அவரது பார்மும் கொஞ்சம் வீழ்ந்தது. கிரெக் சாப்பலை கோச் ஆக கொண்டு வந்ததில் கங்குலியின் பங்குதான் அதிகம்.

ஆனால் அவருக்கும் இவருக்கும் ஆகவில்லை. அதுவும் பொதுவெளியில் இருவருக்குமான பிரச்சனை வெளியே வந்தது. கராச்சியில் தைரியமாக இவர் எடுத்த 30+ ரன்கள் இவரது இடத்தை உறுதி செய்யவில்லை. இடத்தை இழந்தார், இனி கங்குலி முடிந்து விட்டார் என்று அனைவரும் இறுதிப்பா எழுதத் தொடங்கினர்.

ஆனால் 2006-07 தென் ஆப்பிரிக்கா தொடருக்கு கங்குலி மீண்டும் அணியில் தேர்வானார். அந்தத் தொடரில் இவர்தான் அதிகரன்களை எடுத்தவராக முடிந்தார், ஒருநாள் போட்டிகளில் 4 அரைசதங்களை விளாசி தன் மீள்வருகையை முரசறைந்தார் தாதா. இதற்கு அடுத்த இங்கிலாந்து தொடரிலும் பிரமாதமாக ஆடிய கங்குலி, தொடரில் அதிக ரன்களை எடுத்த 2வது வீரராகத் திகழ்ந்தார்.

பிறகு பாகிஸ்தான் இங்கு வந்து டெஸ்ட் போட்டித் தொடரை ஆடிய போது அடுத்தடுத்து சதங்களை அடித்து அசத்தினார் தாதா

அதுவும் பெங்களூருவில் தன் அதிகபட்ச டெஸ்ட் ஸ்கோரான 239 ரன்களை பாகிஸ்தானுக்கு எதிராக விளாசி ரசிகர்களின் உள்ளங்களில் இன்றும் என்றும் தாதாவாக நிற்கிறார்... நிற்பார். நல்ல பார்மில் இருந்தும் ஆஸ்திரேலியாவின் சிபி தொடருக்கு இவரை உட்கார வைத்தனர். அதன் பிறகே ஒருநாள் அணியில் அவர் இடம்பெறவேயில்லை.

கங்குலி கேப்டனாக 146 ஒருநாள் சர்வதேச போட்டிகளில் 76 போட்டிகளில் வென்றுள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் 49 போட்டிகளில் 21-ல் வெற்றி, 15 ட்ரா 13 தோல்வி. டெஸ்ட் போட்டிகளில் 113 ஆட்டங்களில் 7212 ரன்கள் 16 சதம் 35 அரைசதம். ஒருநாள் போட்டிகளில் 311 போட்டிகளில் 300 இன்னிங்ஸ்களில் 11,363 ரன்கள். அதிகபட்ச ஸ்கொர் 183, 22 சதங்கள் 72 அரைசதங்கள். ஒருநாள் போட்டிகளில் 100 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார், அதில் 16 ரன்களுக்கு ஒருமுறை 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.

First published:

Tags: Birthday, Sourav Ganguly