• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • இந்திய வீரர்கள் மாட்டிறைச்சி சாப்பிட தடை இல்லை - பிசிசிஐ பொருளாளர் துமால் மறுப்பு

இந்திய வீரர்கள் மாட்டிறைச்சி சாப்பிட தடை இல்லை - பிசிசிஐ பொருளாளர் துமால் மறுப்பு

மாட்டிறைச்சி தடை இல்லை-பிசிசிஐ மறுப்பு

மாட்டிறைச்சி தடை இல்லை-பிசிசிஐ மறுப்பு

ஒவ்வொரு தொடருக்கு முன்பாகவும் உணவு என்னென்ன என்பதை அணி நிர்வாகம் முடிவு செய்யும் என்றும் இது தொடரை நடத்தும் வாரியம் வழியாகவே அறிவுறுத்தப்படும் என்றும் கூறப்படுகிறது.

  • Share this:
    இந்திய கிரிக்கெட் வீரர்கள் மாட்டிறைச்சி, பன்றி இறைச்சி ஆகியவற்றை சாப்பிட தடை விதித்துள்ளதாக புதிய சர்ச்சை எழுந்துள்ள நிலையில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் பொருளாளர் அருண் துமால் அப்படியெல்லாம் எந்தத் தடையும் இல்லை என்று மறுப்பு வெளியிட்டுள்ளார்.

    நியூசிலாந்து அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டி கான்பூரில் நடைபெறவுள்ளது. விராத் கோலி ஓய்வில் உள்ளதால் ரஹானே இந்த ஆட்டத்தில் இந்திய அணிக்கு தலைமை தாங்க உள்ளார். இந்நிலையில் போட்டியில் விளையாடும் இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கான டயட் பிளான் குறிப்புகள் வெளியாகியுள்ளது.

    அதில், இந்திய கிரிக்கெட் வீரர்கள் எந்த வகையிலும் மாட்டிறைச்சி மற்றும் பன்றி இறைச்சி ( Beef And Pork)ஆகியவற்றை உட்கொள்ளக் கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், வீரர்கள் ஹலால் முறையில் சமைக்கப்பட்ட உணவுகளை மட்டுமே உண்ண வேண்டும் என்றும் உணவுக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக சர்ச்சைகள் கிளம்ப தற்போது பிசிசிஐ தரப்பிலிருந்து மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

    “இந்த டயட் விவகாரம் விவாதிக்கப்படவே இல்லை. ஆகவே இது அமல்படுத்தப்படாது. எப்போது இந்த முடிவெல்லாம் எடுக்கப்பட்டது அல்லது முன்பு எடுக்கப்பட்டதா என்பதிலும் உறுதியில்லை. என்னைப் பொறுத்தவரை எந்த ஒரு தடையையும் விதிக்கவில்லை. உணவு முறை என்பது தனிநபர்களின் விருப்பம் சார்ந்தது. இதில் பிசிசிஐக்கு எந்த ஒரு பங்கும் இல்லை.

    ஏதாவது ஒரு தருணத்தில் ஏதாவது ஒரு வீரருக்கு ஹலால் பற்றி அறிவுறுத்தப்பட்டிருக்கலாம். அதாவது ஒரு வீரருக்கு மாட்டிறைச்சி பிடிக்கவில்லை எனில் உணவு கலப்பு கூடாது என்று சொல்லியிருக்கலாம். இந்த ஹலால் விவகாரம் பிசிசிஐ கவனத்துக்குக் கொண்டுவரப்படவில்லை.

    பிசிசிஐ ஒருபோதும் எந்த வீரர் எதைச் சாப்பிட வேண்டும், அல்லது கூடாது என்பதை அறிவுறுத்தியதில்லை. வீரர்கள் தங்கள் உணவுகளை தேர்வு செய்து கொள்ளலாம். வெஜிடேரியன் என்றால் அது அவர்கள் விருப்பம் சார்ந்ததே. அதே போல் நான் -வெஜ் என்றாலும் அவர்கள் விருப்பம்தான், நாங்கள் இதில் எப்படி தலையிட முடியும்?” என்றார் அருண் துமால்.

    ஆனால் இந்தியா டுடே ஊடகத்தின் செய்திகளின்படி ஒவ்வொரு தொடருக்கு முன்பாகவும் உணவு என்னென்ன என்பதை அணி நிர்வாகம் முடிவு செய்யும் என்றும் இது தொடரை நடத்தும் வாரியம் வழியாகவே அறிவுறுத்தப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் பிசிசிஐ தரப்பில் மறுப்பு வெளியிடப்பட்டுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: