VIDEO: நியூசிலாந்து மசூதிகளில் துப்பாக்கிச்சூடு.. உயிர்தப்பிய கிரிக்கெட் வீரர்கள்.. தொடர் ரத்து!

உயிர்தப்பிய வங்கதேச வீரர்கள். (Twitter)

நண்பகல் தொழுகைக்காக வங்கதேச கிரிக்கெட் வீரர்கள் அனைவரும் பேரூந்தில் மசூதிக்கு அழைத்து வரப்பட்டனர. #NewZealandTerrorAttack #MosquesGunFire

  • News18
  • Last Updated :
  • Share this:
நியூசிலாந்தில் மசூதிகளில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவங்களின் எதிரொலியாக வங்கதேச கிரிக்கெட் தொடர் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட வங்கதேச கிரிக்கெட் அணி 3 ஒரு நாள் மற்றும் 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வந்தது. ஒரு நாள் தொடரை 3-0 என நியூசிலாந்து அணி முழுவதுமாக கைப்பற்றியது.

இதனை அடுத்து நடந்த முதலிரண்டு டெஸ்ட் போட்டிகளில் நியூசிலாந்து அணி இன்னிங்ஸ் வெற்றி பெற்று 2-0 என முன்னிலை வகித்தது.

New Zealand Cricket Team, நியூசிலாந்து கிரிக்கெட் அணி
ஒரு நாள் தொடர் கோப்பை உடன் நியூசிலாந்து கிரிக்கெட் அணி. (BlackCaps)


இரு அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நாளை (மார்ச் 16) கிறிஸ்ட்சர்ச் நகரில் நடைபெற இருந்தது. இதற்காக இரு அணி வீரர்களும் அந்தப் பகுதியில் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.

கிறிஸ்ட்சர்ச் நகரில் உள்ள பெரிய மசூதியில் இன்று வெள்ளிக்கிழமை தொழுகை நடந்து கொண்டிருந்தது. அப்போது, திடீரென நுழைந்த மர்ம நபர் தொழுகை நடத்திக்கொண்டிருந்த மக்களை நோக்கி துப்பாக்கியால் கண்மூடித்தனமாக சுடத் தொடங்கினார்.

அதே நேரம், இன்று நண்பகல் தொழுகைக்காக வங்கதேச கிரிக்கெட் வீரர்கள் அனைவரும் பேரூந்தில் மசூதிக்கு அழைத்து வரப்பட்டனர். மசூதி வளாகத்துக்குள் சில வீரர்களும், பல வீரர்கள் பேருந்திலும் அமர்ந்திருந்தபோது, மசூதிக்குள் துப்பாக்கிச்சூடு சத்தம் கேட்டது.



உடனே, உயிர் தப்பி வெளியே ஓடி வந்த வீரர்கள் தங்கியிருந்த விடுதிக்குச் சென்றனர். வீரர்கள் தங்கியிருக்கும் விடுதிக்கு பலத்த பாதுக்காப்பு போடப்பட்டுள்ளது. உயிர் தப்பினாலும் வீரர்கள் ஒருவித பதற்றத்துடனே இருக்கிறார்கள். துப்பாக்கிச்சூட்டின் எதிரொலியாக நாளை நடைபெற இருந்த டெஸ்ட் போட்டி ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Also Watch...

Published by:Murugesan L
First published: