• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • விராட் கோலி டி20 வெற்றிக் கோப்பையை என் கையில் கொடுத்தவுடன் என் கண்களில் கண்ணீர்- ‘யார்க்கர்’நடராஜன் உருக்கம்

விராட் கோலி டி20 வெற்றிக் கோப்பையை என் கையில் கொடுத்தவுடன் என் கண்களில் கண்ணீர்- ‘யார்க்கர்’நடராஜன் உருக்கம்

தங்கராசு நடராஜன்

தங்கராசு நடராஜன்

டி20 தொடரை வென்றவுடன் ஹர்திக் பாண்டியா, டி.நடராஜனிடம் ஆட்ட நாயகன் விருதைப் பகிர்ந்தது ஒரு கணம் என்றால், டி20 கோப்பையையே நடராஜனிடம் அளித்து விராட் கோலி கவுரவித்தார்.

  • Share this:
    வெற்றிகரமான ஆஸ்திரேலியா தொடரில் இந்திய அணி டி20 மற்றும் டெஸ்ட் தொடரை கைப்பற்றி அசத்தியது, இந்தத் தொடரில் நெட் பவுலராகச் சென்று அனைத்து வடிவங்களிலும் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான நடராஜனை ஐசிசி உட்பட பலரும் பாராட்டினர்.

    இந்நிலையில் ஆஸ்திரேலியாவிலிருந்து சொந்த ஊர் திரும்பிய நடராஜனுக்கு பிரமாதமான வரவேற்பை ஊரில் அளித்து நெகிழச் செய்தனர்.

    டி20 தொடரை வென்றவுடன் ஹர்திக் பாண்டியா, டி.நடராஜனிடம் ஆட்ட நாயகன் விருதைப் பகிர்ந்தது ஒரு கணம் என்றால், டி20 கோப்பையையே நடராஜனிடம் அளித்து விராட் கோலி கவுரவித்தார்.

    இது தொடர்பாக பேட்டியளித்த நடராஜன் கூறும்போது, “ஆஸ்திரேலியாவில் டி20 தொடரை வென்ற பிறகு விராட் கோலி என்னிடம் கோப்பையைக் கையில் கொடுத்தார். என் கண்களில் கண்ணீர் வந்தது.

    ஐபிஎல் கிரிக்கெட்டில் பல பெரிய வீரர்களுடன் ஆடியது கைக்கொடுத்தது. அவர்களுடன் என்னால் உரையாட முடிந்தது, கற்றுக் கொள்ள முடிந்தது. முதலில் கடினமாக இருந்தது பிறகு எல்லாம் எளிதானது.

    கோலி, ரஹானே இருவரும் என்னை நன்றாக ஊக்குவித்தனர். அவர்கள் கேப்டன்சியில் மகிழ்ச்சியுடன் ஆடினேன்.” என்றார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: