Home /News /sports /

புஜாரா பேச்சைக் கேட்டு சதத்தை கோட்டை விட்டேன் - கடுப்பான ரிஷப் பண்ட்

புஜாரா பேச்சைக் கேட்டு சதத்தை கோட்டை விட்டேன் - கடுப்பான ரிஷப் பண்ட்

பண்ட் - புஜாரா

பண்ட் - புஜாரா

ஜனவரி 2021, சிட்னி டெஸ்ட் போட்டியில் இந்தியா இன்னொரு 407 ரன்கள் இலக்கை விரட்டி வென்றிருக்கும். புஜாரா 77 ரன்கள் எடுத்தார், ரிஷப் பண்ட் 97 ரன்களை 118 பந்துகளில் எடுத்து அவுட் ஆனார். ஆனால் தான் அவுட் ஆனதற்கு புஜாராதான் காரணம் என்று ரிஷப் பண்ட் இப்போது மனம் திறந்துள்ளார்.

மேலும் படிக்கவும் ...
    ஜனவரி 2021, சிட்னி டெஸ்ட் போட்டியில் இந்தியா இன்னொரு 407 ரன்கள் இலக்கை விரட்டி வென்றிருக்கும். புஜாரா 77 ரன்கள் எடுத்தார், ரிஷப் பண்ட் 97 ரன்களை 118 பந்துகளில் எடுத்து அவுட் ஆனார். ஆனால் தான் அவுட் ஆனதற்கு புஜாராதான் காரணம் என்று ரிஷப் பண்ட் இப்போது மனம் திறந்துள்ளார்.

    கடைசியில் ரிஷப் பண்ட் அவுட் ஆன பிறகு காயமடைந்த ஹனுமா விஹாரியும், அஸ்வினும் சுமார் 40 ஓவர்கள் பக்கம் ஆடி 62 ரன்கள் கூட்டணி அமைத்து நினைவுகூரத்தக்க ஒரு ட்ராவை இந்தியா சிட்னியில் ரஹானே கேப்டன்சியில் கண்டடைந்தது.

    ரிஷப் பண்ட்டும் புஜாராவும் 4வது விக்கெட்டுக்காக அன்று 148 ரன்களை சேர்க்க இந்திய வெற்றி தெரிந்தது. புஜாரா 205 பந்துகளில் 77 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். பண்ட் 97 ரன்களில் அவுட் ஆனார்.

    அந்த ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரை இந்தியா 2-1 என்று பிற்பாடு வென்றதற்கும் ரிஷப் பண்ட்டின் கடைசி நாள் அதிரடியே காரணம். இந்த காவியத் தொடர் வெற்றி குறித்த ஆவணத் தொடர் ஒன்றில் பேசிய ரிஷப் பண்ட், புஜாரா தன்னை நின்று ஆடு என்றும் கன்னாபின்னாவென்று ஷாட்களுக்கு செல்லாதே என்றும் தடுத்து நிறுத்தினார், இது தனக்கு பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி ஆட்டமிழந்ததில் போய் முடிந்தது என்று கூறிஉள்ளார் ரிஷப் பண்ட்.

    “ரிஷப் நின்று ஆடு, சிங்கிள், 2 ரன்கள் எடு. பவுண்டரி தேவையில்லை இப்படி கூறிக்கொண்டே இருந்தார் புஜாரா, எனக்கு சிறிது கோபம் வந்தது. ஏனெனில் புஜாரா அவ்வாறு கூறியது எனக்குள் குழப்பம் ஏற்படுத்தியது ஒருமாதிரியான இரட்டை மன நிலைக்குத் தள்ளப்பட்டேன்.

    நான் என்ன செய்யவேண்டும் என்று கிளியராகவே இருந்தேன். நாங்கள் நல்ல உத்வேகத்தை எட்டியிருந்தோம். என் மனதில் அப்போது அவுட் ஆனப் போது என்ன இப்படி ஆகிவிட்டது. நான் சதமெடுத்திருந்தால் என் சிறந்த சதமாகியிருக்கும் அது என்ற எண்ணம் இப்போதும் உள்ளது” என்றர் ரிஷப் பண்ட்.

    கேப்டன் ரஹானே கூறும்போதும், “நன்றாக ஆடிவந்தார் ரிஷப் அப்போது ரேஷ் ஸ்ட்ரோக் ஆடி அவுட் ஆக வேண்டாமே என்று ஒரு சீனியர் வீரர் கூறுகிறார், பண்ட் அவுட் ஆனது துரதிர்ஷ்டவசமானது.

    பெவிலியனுக்கு திரும்பியதும் ரிஷப் பண்ட் ஏமாற்றத்துடனும் கோபத்துடனும் காணப்பட்டார், ‘புஜாரா என்னிடம் வந்து 97 நின்று ஆடு என்றார். நான் 97 என்று கூட எனக்குத் தெரியவில்லை. அப்படியே ஆடியிருந்தால் நான் என் சதத்தை எடுத்திருப்பேன்’ என்று ரிஷப் பண்ட் புலம்பினார், என்று ரஹானே நினைவுகூர்ந்தார்.
    Published by:Muthukumar
    First published:

    Tags: Cheteshwar Pujara, India vs Australia, Rishabh pant

    அடுத்த செய்தி