Home /News /sports /

எனக்கும் ஹர்பஜனுக்கும் புத்துயிர் கொடுத்த தெய்வம் அனில் கும்ப்ளே: விரேந்திர சேவாக் உருக்கம்

எனக்கும் ஹர்பஜனுக்கும் புத்துயிர் கொடுத்த தெய்வம் அனில் கும்ப்ளே: விரேந்திர சேவாக் உருக்கம்

அனில் கும்ப்ளே- சேவாக்

அனில் கும்ப்ளே- சேவாக்

தன்னை இந்திய அணியிலிருந்து நீக்கிய பிறகு கேப்டன் அனில் கும்ப்ளே எப்படி தன் கிரிக்கெட் வாழ்க்கைக்கு புத்துயிர் கொடுத்தார் என்பதை அதிரடி மன்னன் விரேந்திர சேவாக் உருக்கமாக பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். ஹர்பஜன் சிங்கின் கரியருக்கும் புத்துயிர் கொடுத்தவர் அனில் கும்ப்ளேதான் என்றார் சேவாக்.

மேலும் படிக்கவும் ...
    தன்னை இந்திய அணியிலிருந்து நீக்கிய பிறகு கேப்டன் அனில் கும்ப்ளே எப்படி தன் கிரிக்கெட் வாழ்க்கைக்கு புத்துயிர் கொடுத்தார் என்பதை அதிரடி மன்னன் விரேந்திர சேவாக் உருக்கமாக பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். ஹர்பஜன் சிங்கின் கரியருக்கும் புத்துயிர் கொடுத்தவர் அனில் கும்ப்ளேதான் என்றார் சேவாக்.

    ஸ்போர்ட்ஸ் 18 சேனலின் ஹோம் ஆஃப் ஹீரோஸ் நிகழ்ச்சியில் யுவராஜ் சிங்கிற்கு அடுத்த படியாக சேவாக் பேட்டி ஒளிபரப்பாகி வருகிறது, அதில் தன்னை அணியிலிருந்து நீக்கியிருக்காவிட்டால் 10,000 ரன்களுக்கும் மேல் குவித்திருப்பேன் என்றார் சேவாக்.

    ராகுல் திராவிட் -கிரெக் சாப்பல் கூட்டணியில் ஒழிக்கப்பட்ட சேவாக், பிறகு 2007-08-ல் ஆஸ்திரேலியா தொடரில் அதுவும் வாசிம் ஜாஃபர் தோல்வியடைய, இயன் சாப்பல் ‘வேர் இச் வீரு?’ என்று கேட்க அனில் கும்ப்ளே கேப்டன்சியில் மீண்டும் பெர்த் டெஸ்ட்டுக்குத் திரும்பினார் சேவாக். மெல்போர்னில் சவுகரியமாகத் தோற்ற இந்திய அணி சிட்னியில் நடுவர்களின் ஏகப்பட்ட மோசடிகளினால் பாதிக்கப்பட்டு தோற்றது. அப்போதுதான் நடுவர்கள் மோசடிகளை மூடி மறைக்க ஹர்பஜன் மீது பழி சுமத்தி கவனத்தை திசைத்திருப்பும் உத்தியை ஆஸ்திரேலியா கேப்டன் ரிக்கி பாண்டிங் உட்பட அனைவரும் கடைப்பிடித்தனர்.

    அப்போது 3வது டெஸ்ட் மேட்ச் பெர்த்தில் நடைபெறுவதற்கு முன்பு சேவாகிடம் கும்ப்ளே, பயிற்சி ஆட்டத்தில் 50 அடி, உன்னை அணியில் எடுக்கிறேன் என்றார்.ஆனால் சேவாக் ஒருபடி மேலே போய் லஞ்ச்சுக்கு முன்னாலேயே சதம் அடித்தார். உடனே பெர்த் வாய்ப்பு கிடைத்தது, டெஸ்ட்டில் நல்ல தொடக்கம் கொடுத்ததோடு சேவாக் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார், இந்தியா ஆஸ்திரேலியாவுக்கு பேரடி கொடுத்தது.

    அடுத்த அடிலெய்ட் டெஸ்ட்டில் சேவாக் 63 மற்றும் 151 ரன்கள் எடுத்து மீண்டும் அணியில் தன் இடத்தை ஸ்திரப்படுத்திக் கொண்டார்.

    இது குறித்து சேவாக் கூறும்போது, “அந்த 60 ரன்கள் என் வாழ்நாளின் கடினமான ரன்கள். அனில் கும்ப்ளே என் மீது வைத்த நம்பிக்கையை நான் திருப்பி அளிக்க வேண்டாமா. என்னை மீண்டும் அணியில் தேர்வு செய்ததற்காக அவரை யாரும் கேள்வி கேட்டு விடக்கூடாது பாருங்கள். பாட்டுப்பாடினேன், நடுவரிடம் பேசிக்கொண்டே ஆடினேன், என் பிரஷர் பறந்தது.

    அப்போது அனில் கும்ப்ளே சொன்னார், ‘நான் கேப்டனாக இருக்கும் வரையில் உன்னை அணியிலிருந்து நீக்க மாட்டேன்’ என்று உறுதியளித்தார். கும்ப்ளே கேப்டன்சியில் 7 டெஸ்ட் போட்டிகளில் ஆடிய சேவாக் அந்தக் காலக்கட்ட சராசரி மட்டும்62. அப்போதுதான் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 319, இலங்கைக்கு எதிராக 201 நாட் அவுட். கும்ப்ளேயின் கடைசி கேப்டன்சி டெஸ்ட்டில் சேவாக் 5 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்.

    சிட்னி டெஸ்ட் சர்ச்சை, ஹர்பஜன் சர்ச்சையில் அனில் கும்ப்ளே மட்டும் கேப்டனாக இல்லாதிருந்தால் தொடர் பாதியிலேயே முடிந்திருக்கும், ஹர்பஜன் கரியரும் முடிந்திருக்கும் எனவேதான் ஹர்பஜன் கரியருக்கும் புத்துயிர் அளித்தவர் அனில் கும்ப்ளே” என்றார் சேவாக்.
    Published by:Muthukumar
    First published:

    Tags: Anil kumble, Harbhajan Singh, Virender sehwag

    அடுத்த செய்தி