குஜராத்தில் ஆதிக்க சாதி கிரிக்கெட் தொடர்களுக்கு மாற்றாக தலித் பிரீமியர் லீக் அறிமுகம்- இளைஞர்களின் புது முயற்சி

குஜராத்தில் ஆதிக்க சாதி கிரிக்கெட் தொடர்களுக்கு மாற்றாக தலித் பிரீமியர் லீக் அறிமுகம்- இளைஞர்களின் புது முயற்சி

மாதிரிப் படம்.

பனஸ்கந்தாவில் உள்ள தலித் தலைவர்தான் தொடரை தொடங்கி வைத்தனர். தலித் மக்களிடையே ஒற்றுமையை வளர்க்கவும் அவர்களது திறமையை வளர்க்கவும் இந்தத் தொடர் நடத்தப்படுவதாக தலித் அமைப்புகள் இதனை வரவேற்றுள்ளன.

 • Share this:
  வடக்குக் குஜராத்தில் உள்ள பனஸ்கந்தா மாவட்டத்தில் சிலபல இளைஞர்கள் ஒன்று சேர்ந்து தலித் பிரீமியர் லீக் டென்னிஸ் பந்து கிரிக்கெட் தொடரை அறிமுகம் செய்துள்ளனர்.

  இந்தத் தொடர் முற்றிலும் எஸ்.சி./எஸ்.டி. பிரிவினருக்கானது மட்டுமே. இதன் மூலம் பட்டியல் பிரிவு சாதியினர் மற்றும் நலிவுற்ற சமூகப்பிரிவுகளின் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கச் செய்வதே நோக்கம் என்று அவர்கள் கூறுகின்றனர்.

  மார்ச் 6ம் தேதி பாலான்பூரில் டென்னிஸ் பந்து தலித் பிரீமியர் லீக் தொடர் தொடங்கியது. ஏப்ரல் முதல்வாரத்தில் இந்தத் தொடர் முடிவடையும்.

  இது தொடர்பாக இந்த தலித் பிரீமியர் லீக் புதுமையைப் புகுத்திய கிரிக்கெட் தொடர் அமைப்பாளர்களில் ஒருவரான மனோகர் தாரய்யா ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் கூறும்போது, பலதரப்பட்ட சமூகப்பிரிவினரும் பல தொடர்களை மாநிலம் முழுதும் நடத்தி வருகின்றனர். ராஜ்புத், தாக்கூர்கள், சவுதாரிகள் அனைவரும் சாதி கிரிக்கெட் தொடர்களை நடத்துகின்றனர். அந்தத் தொடர்களில் அந்தந்த சாதியினருக்கு மட்டுமே இடம்.

  எனவே தலித் மற்றும் ஆதிவாசி, பழங்குடியனர்களுக்கான தொடரை நடத்த நாங்கள் திட்டமிட்டோம். நானும் எனது 3 நண்பர்களும் தலித் பிரீமியர் லீக் தொடங்கினோம். இது தலித்துகளுக்கு மட்டுமானது.

  சமூக இளைஞர்களுக்கு இடையே ஒரு பிணைப்பை ஏற்படுத்துவதுதான் இதன் பின்னணியில் உள்ள கருத்து. எங்கள் முயற்சி வித்தியாசமானது, ஆனால் குஜராத்தில் இந்த வித்தியாச முயற்சிக்கு நான் தான் முன்னோடி என்று கூறிக்கொள்ள விரும்பவில்லை., என்றார், இவர் கேஸ் ஏஜென்சி நடத்தி வருகிறார்.

  மொத்தம் 32 அணிகள் கொண்ட கிரிக்கெட் தொடராக இது அமைந்துள்ளது. இதில் பதிவு செய்து கொள்ள நிறைய தலித் இளைஞர்கள் அணி பதிவு செய்து வருகின்றன.

  தொடருக்கான பதிவுக்கட்டணம் ரூ.2,100. வின்னருக்கு ரொக்கப்பரிசு ரூ.11,000. ரன்னர் அணிக்கு ரூ.4,100. பாலன்பூரில் உள்ள மைதானத்தை எடுத்துள்ளார்கள் வாடகை தினசரி ரூ.2,000.

  பனஸ்கந்தாவில் உள்ள தலித் தலைவர்தான் தொடரை தொடங்கி வைத்தனர். தலித் மக்களிடையே ஒற்றுமையை வளர்க்கவும் அவர்களது திறமையை வளர்க்கவும் இந்தத் தொடர் நடத்தப்படுவதாக தலித் அமைப்புகள் இதனை வரவேற்றுள்ளன.
  Published by:Muthukumar
  First published: