• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • கின்னஸ் சாதனை படைத்த கிரிக்கெட் வீரர் கைது: ஆந்திராவில் பரபரப்பு!

கின்னஸ் சாதனை படைத்த கிரிக்கெட் வீரர் கைது: ஆந்திராவில் பரபரப்பு!

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

#GuinnessWorldRecord holder for cricket arrested in #AndhraPradesh | பிசிசிஐ தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே பிரசாத் பேசுவதுபோல் பேசி ரூ.5 லட்சம் வரை மோசடி புகாரில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. #MSKPrasad

  • News18
  • Last Updated :
  • Share this:
    82 மணி நேரம் தொடர்ச்சியாக கிரிக்கெட் விளையாடி கின்னஸ் உலக சாதனை படைத்த ஆந்திரா கிரிக்கெட் வீரர் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) வீரர்கள் தேர்வுக்குழு தலைவராக இருப்பவர் எம்.எஸ்.கே பிரசாத். இவர் கடந்த வாரம் விஜயவாடா சைபர் கிரைம் காவல்நிலையத்தில் ஒரு பரபரப்பு புகாரை அளித்தார்.

    அந்தப் புகாரில், நாகராஜு என்பவர் ட்ரூ காலர் ஆப்பில் தனது பெயரை எம்.எஸ்.கே பிரசாத் என பதிவு செய்து, தான் பேசுவதுபோல் பேசி ரூ.5 லட்சம் வரை மோசடி செய்துள்ளதாக கூறியிருந்தார்.

    MSK Prasad, எம்.எஸ்.கே.பிரசாத்
    இந்திய அணித் தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத். (Getty: Images)


    இதுகுறித்து விசாரணை நடத்திய காவல்துறையினர் நாகராஜுவை கைது செய்துள்ளனர். இவர், கடந்த 2016-ம் ஆண்டு 82 மணி நேரம் தொடர்ச்சியாக கிரிக்கெட் விளையாடி கின்னஸ் உலக சாதனை படைத்தவர். ரஞ்சி டிராபி போட்டியில் ஆந்திர பிரதேச அணிக்காகவும் இவர் விளையாடியுள்ளார்.

    எம்.எஸ்.கே.பிரசாத் குரலில் பேசி தொழிலதிபர்களை ஏமாற்ற முயற்சி செய்த புகாரின் அடிப்படையில் கன்னாவரம் விமானநிலையம் அருகே நாகராஜு கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து இருசக்கர வாகனம் மற்றும் ரூ.1.8 லட்சம் பணத்தை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

    Budumuru Nagaraju Cricketer
    கின்னஸ் சாதனை படைத்த கிரிக்கெட் வீரர் பதுமூரு நாகராஜு.


    முன்னதாக, தோனி பெயரில் பயிற்சி மையம் தொடங்கப் போகிறேன், அமைச்சர் உதவியாளர் என பலமுறை நாகராஜூ மோசடியில் ஈடுபட்டுள்ளார். பிசிசிஐ தேர்வுக்குழு தலைவர் பெயரையே பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ஐ.பி.எல் தொடரில் இருந்து ரபாடா திடீர் விலகல்... டெல்லிக்கு ஆபத்து!

    தோனியைப் பின்பற்றிய ஐ.நா பிரதிநிதி... ருசிகர தகவலால் வியப்பில் ரசிகர்கள்!

    வயதை மறைத்து விளையாடினாரா அப்ரிடி..? சுயசரிதை புத்தகத்தால் புதிய சிக்கல்!

    ஐ.பி.எல் தொடரில் இருந்து தோனி ஓய்வா? ரெய்னா சூசகப் பேச்சால் பரபரப்பு!

    சொன்னதை செய்து காட்டிய டேவிட் வார்னர்!

    உலகத்திலேயே தோனி தான் சிறந்த கேப்டன் - பிராவோ

    சூப்பர் ஓவர் பரபரப்பு! ஹைதராபாத்தை வீழ்த்தி ப்ளேஆஃப்க்குள் நுழைந்தது மும்பை அணி

    Also Watch...






    தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.














    விளையாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  விளையாட்டு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.



    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Murugesan L
    First published: