• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • T20 WorldCup : இந்தியாவுக்கு எதிரான போட்டிக்கு முன் பாகிஸ்தானுக்கு பின்னடைவு... அணியை விட்டு வெளியேறிய பயிற்சியளார்

T20 WorldCup : இந்தியாவுக்கு எதிரான போட்டிக்கு முன் பாகிஸ்தானுக்கு பின்னடைவு... அணியை விட்டு வெளியேறிய பயிற்சியளார்

கிராண்ட் பிராட்பர்ன்

கிராண்ட் பிராட்பர்ன்

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் உயர் செயல்திறன் தலைமை பயிற்சியளார் பதவியிலிருந்து கிராண்ட் பிராட்பர்ன் ராஜினாமா செய்துள்ளார்.

  • Share this:
    டி20 உலகக் கோப்பையில் இந்தியாவிற்கு எதிரான போட்டியில் விளையாடுவதற்கு முன் பாகிஸ்தான் பின்னடைவை சந்தித்துள்ளது. அந்த அணியின் உயர் செயல்திறன் தலைமை பயிற்சியளார் (Head of High Performance Coaching) கிராண்ட் பிராட்பர்ன் தனது பதவியை ராஜினாமா செய்தார். முன்னாள் நியூசிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் வீரர் பிராட்பர்ன் 3 ஆண்டுகளாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துடன் தொடர்பில் இருந்தார்.

    பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துடன் இணைந்து பணியாற்றியது பெருமையாக இருந்தது. . நான் அற்புதமான நினைவுகளுடன் மற்றும் அற்புதமான அனுபவத்துடன் புறப்படுகிறேன். எனக்கும் கற்றுக்கொள்ள ஒரு சிறந்த வாய்ப்பை அளித்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு நான் நன்றி சொல்ல விரும்புகிறேன் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் பிராட்பர்ன் மேற்கொள் காட்டி உள்ளார்.

    பிசிபி தலைவராக ரமீஸ் ராஜா பொறுப்பேற்ற பிறகு பதவி விலகிய ஐந்தாவது உயர் அதிகாரி பிராண்ட்பர்ன் ஆவார். அவருக்கு முன், பாகிஸ்தானின் தலைமை பயிற்சியாளர் மிஸ்பா-உல்-ஹக், பந்துவீச்சு பயிற்சியாளர் வக்கார் யூனிஸ், தலைமை நிர்வாக அதிகாரி வாசிம் கான் மற்றும் மார்க்கெட்டிங் தலைவர் பாபர் ஹமீத் ஆகியோர் விலகினர்.

    Also Read : IPL 2021 Final: சென்னைக்கு எதிராக கொல்கத்தா மாஸ்டர் பிளான்... Playing 11-ல் மாற்றம்?

    பிராட்பர்ன் நியூசிலாந்து அணிக்காக 7 டெஸ்ட் போட்டிகளில் விளையாடினார். அவர் 1990 முதல் 2001 வரை நியூசிலாந்துக்காக 7 டெஸ்ட் மற்றும் 11 ஒருநாள் போட்டிகளில் விளையாடினார். பிராட்பர்ன் நியூசிலாந்து-ஏ மற்றும் நியூசிலாந்து 19 வயதுக்குட்பட்ட அணிகளுக்கு பயிற்சியாளராகவும் இருந்தார். பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தால் நாட்டில் செயல்படும் அனைத்து உயர் செயல்திறன் மையங்களிலும் பணியாற்றும் உதவி ஊழியர்களின் பயிற்சியின் அளவை உயர்த்தும் பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டது.

    டி20  உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வரும்  அக்டோபர் 17 ஆம் தேதி முதல் நவம்பர் 14 ஆம் தேதி வரை  ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில்  நடைபெறுகிறது.  இந்தியா தனது முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியை அக்டோபர் 24 ல்  எதிர்கொள்கிறது .

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vijay R
    First published: