11 ஆண்டுக்கால பந்தம் முடிந்தது...! விராட் கோலி உருக்கம்

Virat Kohli | 2017 ஐ.பி.எல் தொடரின் போது பெங்களூரு வந்த இவர் 15 தெரு நாய்களை தத்து எடுத்து அதற்கான செலவுகளை ஏற்றுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

11 ஆண்டுக்கால பந்தம் முடிந்தது...! விராட் கோலி உருக்கம்
விராட் கோலி
  • Share this:
இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் அவரது மனைவி அனுஷ்கா சர்மா இருவரும் அவர்களது செல்லப்பிராணி நாய் இறந்த சோகத்தில் உள்ளனர்.

கொரோனா ஊரடங்கு காரணமாக சர்வதேச கிரிக்கெட் போட்டி முதல் உள்ளூர் போட்டிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஐ.பி.எல் தொடரில் பிஸியாக இருக்க வேண்டிய வீரர்கள் இணையத்தில் ஆக்டிவாக உள்ளனர்.

இந்நிலையில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தான் செல்லமாக வளர்த்து வந்த புருனோ என்ற நாயை வளர்த்து வந்தார். புருனோவுடன் விளையாடும் புகைப்படங்களையும் அவர் இணையத்தில் பதிவிட்டு இருந்தார். தற்போது புருனோ உடல்நலக் குறைவால் இறந்து விட்டதாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.


மேலும் ”புருனோ உன் ஆன்மா சாந்தியடைத்தும்.எங்கள் வாழ்நாளில் 11 ஆண்டுகள் உன் அன்பை பொழிந்தாய். இப்போது இன்னும் சிறந்த இடத்திற்கு சென்றுவிட்டாய். இறைவன் உன் ஆன்மாவிற்கு அமைதி தந்து ஆசிர்வாதிப்பார்“ என்றுள்ளார். 
View this post on Instagram
 

♥️ Bruno ♥️ RIP ♥️


A post shared by AnushkaSharma1588 (@anushkasharma) on


அனுஷ்கா சர்மா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புருனோவுடன் இருக்கும் புகைடப்படத்தை பகிர்ந்து “உன் ஆன்மா சந்தியடைத்தும்“ என்றுள்ளார்.

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பொதுவாக நாய்கள் மீது அதிகம் பாசம் கொண்டவர். 2017 ஐ.பி.எல் தொடரின் போது பெங்களூரு வந்த இவர் 15 தெரு நாய்களை தத்து எடுத்து அதற்கான செலவுகளை ஏற்றுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.First published: May 7, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading