• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • Sexist Comment | அம்மா, மனைவியிடம் கடுமையாக திட்டு வாங்கினேன்: சர்ச்சைக் கருத்துக்கு மன்னிப்பு கேட்ட தினேஷ் கார்த்திக்

Sexist Comment | அம்மா, மனைவியிடம் கடுமையாக திட்டு வாங்கினேன்: சர்ச்சைக் கருத்துக்கு மன்னிப்பு கேட்ட தினேஷ் கார்த்திக்

தினேஷ் கார்த்திக்

தினேஷ் கார்த்திக்

அடுத்தவரின் பேட்களுக்கு எப்போதும் ஆசைப்படும் பேட்ஸ்மென்களைப் பற்றி வர்ணனையில் நகைச்சுவையாக தினேஷ் கார்த்திக் கூறியதற்கு கடும் கண்டனங்கள் எழவே அவர் மன்னிப்புக் கேட்டுள்ளார்.

  • Share this:
    பேட்ஸ்மென்களுக்கு அடுத்தவர் பேட்கள் மீது இருக்கும் ஆசையை வர்ணிக்க பெண் விரோதக் கருத்தைக் கூறியதாக எழுந்த சர்ச்சையில் தினேஷ் கார்த்திக் மன்னிப்புக் கேட்டுள்ளார்.

    அதுவும் குறிப்பாக தன் மனைவி, அம்மாவே தன்னைக் கடுமையாக விமர்சனம் செய்தனர் என்று தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார்.

    “எந்த பேட்ஸ்மெனுக்கும் தங்கள் வைத்திருக்கும் மட்டைகள் பிடிப்பதில்லை. பேட்ஸ்மென்களும், பிடிக்காத மட்டைகளும் இணை நிகழ்வுகள், இணை மனநிலைகள், பல பேட்ஸ்மென்கள் தாங்கள் வைத்திருக்கும் மட்டைகளை விரும்புவதில்லை. அடுத்த வீரர் வைத்திருக்கும் பேட்களைத்தான் பெரிதும் விரும்புகிறார்கள். பேட்கள் பக்கத்து வீட்டுக்காரரின் மனைவி போலும், நம்மிடம் இருப்பதை விட இன்னொன்று சிறந்தது, அழகானது என்று நினைக்கிறார்கள். எப்போதுமே நம்மிடம் இருப்பதை விட வேறொன்றுதான், இன்னொன்றுதான் சிறந்தது என்று நினைக்கிறோம்” என்று தினேஷ் கார்த்திக் அன்று கூறியிருந்ததற்கு கடும் கண்டனக்குரல்கள் எழுந்தன.

    தொடர்புடைய செய்தி: பேட்கள் எப்போதும் பக்கத்து வீட்டுக்காரரின் மனைவி போலும்: வர்ணனையில் தினேஷ் கார்த்திக் ஜோக்

    ஏற்கெனவே பெண் விரோத, பாலின வேறுபாட்டை கிண்டல் செய்யும் விதமாக செக்சிஸ்ட் கருத்துக் கூறியதாக அறிமுக வேகப்பந்து வீச்சாளர் ஆலி ராபின்சனையே இங்கிலாந்து வாரியம் தடை செய்து அபராதம் விதித்தது. இந்நிலையில் தினேஷ் கார்த்திக்கின் கருத்தும் செக்சிஸ்ட் என்று கண்டனம் எழுந்தது. இதனையடுத்து தன் கருத்துக்கு மன்னிப்பு கேட்ட தினேஷ் கார்த்திக் கூறியதாவது:

    “கடந்த போட்டியின் போது நான் கூறிய கருத்துக்கு மன்னிப்பு கேட்க விரும்புகிறேன். நான் மனதார அப்படிக் கூறவில்லை. தவறாகப் புரிந்து கொண்டேன். அனைவரிடமும் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். நிச்சயமாக அப்படிக்கூறியது சரியல்ல.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    என் மனைவி மற்றும் அம்மாவே என்னைக் கடுமையாக கடிந்து கொண்டனர். மன்னித்து விடுங்கள், இன்னொரு முறை இப்படி நிகழாது. ” என்று மன்னிப்பு கேட்டார்.

    political correctness என்ற ஒன்று இப்போதெல்லாம் பெரிய அளவில் பார்க்கப்படுகிறது. சமூகத்தில் பிற்படுத்தப்பட்டவர்கள், நலிவுற்றவர்கள், மாற்றுத் திறனாளிகள், பெண்கள் என்று யாரையும் தரக்குறைவாகப் பொதுவெளியில் பேசக்கூடாது என்பது ஒரு எழுதாத விதியாக மாறியுள்ளது, இது வரவேற்கத்தக்கதே.

    இருப்பினும் இன்று நடிகைகளை கேவலப்படுத்தும் போக்குகள் பெரிய அளவில் இருந்து வருகின்றன, இதற்கு யாரும் கண்டனங்களைத் தெரிவிப்பதில்லை என்று ஒரு சில சமூக ஆர்வலர்கள் வருந்துவதும் கவனிக்கத்தக்கது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: