சச்சின் கேள்விக்கு தோனி ஸ்டைலில் பதில் சொன்ன சுந்தர் பிச்சை!
சச்சின் கேள்விக்கு தோனி ஸ்டைலில் பதில் சொன்ன சுந்தர் பிச்சை!
சுந்தர் பிச்சை
உலகக்கோப்பைத் தொடர் தொடங்கும் முன் சுந்தர் பிச்சையிடம் இந்த முறை யார் கோப்பையை வெல்வார்கள் என்று கேட்கப்பட்டதற்கு இந்தியா அல்லது இங்கிலாந்து என்று பதிலளித்திருந்தார்
சச்சின் டெண்டுல்கர் கேட்ட கேள்விக்கு மகேந்திர சிங் தோனி போல் பதில் அளித்துள்ளார் சுந்தர் பிச்சை.
இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதிய போட்டி ஜூன் 30-ம் தேதி நடைபெற்றது. இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியின் போது சச்சின் டெண்டுல்கர் மற்றும் கூகுள் நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை ஆகியோர் சந்தித்துக் கொண்டனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை சச்சின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு புகைப்படம் எப்படி? என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு சுந்தர் பிச்சை, தோனி பந்து வீச்சாளர்களை ஊக்குவிக்க கூறும் ‘மிகச் சிறப்பு’ என பொருள்படும் ‘பஹூத் பாதியா’ என்ற வாக்கியத்தை பயன்படுத்தி பதில் அளித்தார். மேலும் உங்களுடன் சேர்ந்து விளையாட்டை பார்ப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது என்றும் கூறியுள்ளார்
As Mahi bhai would say, "Bahut Badhiya"😀😀Pleasure watching the game with you, brought back great memories, till next time 🏏
வழக்கமாக தோனி விக்கெட் கீப்பிங் செய்யும்போது, வீரர்களை ஊக்குவிக்க அவர் கூரும் வார்த்தை தான் ‘பஹூத் பாதியா’. உலகக்கோப்பைத் தொடர் தொடங்கும் முன் சுந்தர் பிச்சையிடம் இந்த முறை யார் கோப்பையை வெல்வார்கள் என்று கேட்கப்பட்டதற்கு இந்தியா அல்லது இங்கிலாந்து என்று பதிலளித்திருந்தார். இதேபோல் ஆஸ்திரேலிய, நியூசிலாந்து அணிகளின் பெயரையும் அவர் கூறியிருந்தார்.
தற்போது அவர்கூறியது போல் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து ஆகிய அணிகள் அரையிறுதிக்குள் நுழைந்துள்ளது. 4-வது அணியாக நியூசிலாந்து வரவே அதிக வாய்ப்பும் உள்ளது.
Also watch
Published by:Prabhu Venkat
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.