ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு 'குட் லக்': தொடரை வென்ற இந்திய அணிக்கு ஜோ ரூட் வாழ்த்து

ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு 'குட் லக்': தொடரை வென்ற இந்திய அணிக்கு ஜோ ரூட் வாழ்த்து

ரூட் - கோலி

நியூஸிலாந்துக்கு எதிரான அந்த இறுதிப் போட்டியில் சிறப்பாக ஆட ஜோ ரூட் விராட் கோலி தலைமை இந்திய அணிக்கு இன்று வாழ்த்துக்களை தெரிவித்தார்.

  • Share this:
    அகமதாபாத் டெஸ்ட் போட்டியின் 2வது இன்னிங்சில் 135 ரன்களுக்கு சுருண்டு இன்னிங்ஸ் தோல்வியடைந்து தொடரை 1-3 என்று இழந்ததையடுத்து ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு இந்தியா தகுதி பெற்றது.

    நியூஸிலாந்துக்கு எதிரான அந்த இறுதிப் போட்டியில் சிறப்பாக ஆட ஜோ ரூட் விராட் கோலி தலைமை இந்திய அணிக்கு இன்று வாழ்த்துக்களை தெரிவித்தார்.

    இன்று அகமதாபாதில் ஆட்டம் முடிந்து பரிசளிப்பு நிகழ்ச்சியில் ஜோ ரூட் கூறியதாவது:

    கடைசி 3 ஆட்டங்கள் எங்களுக்கு பெரிய சோதனையாக அமைந்தது. இந்தியாவுக்குத்தான் பெருமை சேர வேண்டும். இந்தியா எங்களை அனைத்து பிரிவுகளிலும் தோற்கடித்து விட்டது.

    இதை அனுபவ பாடமகா எடுத்துக் கொண்டு நாங்கள் தனிப்பட்ட முறையிலும் ஒரு அணியாகவும் முன்னேற வேண்டியுள்ளது. ஆட்டத்தின் முக்கியத் தருணங்களில் இந்தியா சிறப்பாக ஆடி ஆட்டத்தைப் பறித்துக் கொண்டது, நாங்கள் சரியாக ஆடவில்லை.

    அது போன்று இந்தியா ஆட்டத்தை எங்களிடமிருந்து பறித்து கொண்டதற்கு ஒரு உதாரணம் ரிஷப் பந்த் நேற்று ஆடிய இன்னிங்ஸ். ஆனால் நாங்கள் எந்த கட்டத்திலும் தொய்ந்து விடவில்லை. நாங்கள் விரும்பிய அளவுக்கு ரன்கள் எடுக்க முடியவில்லை. இந்த ஆடுகளங்களில் இந்தியா எங்களை அனைத்து துறைகளிலும் வீழ்த்தி விட்டது. உலக சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் சிறப்பாக ஆட இந்தியாவுக்கு வாழ்த்துக்கள்.

    அணியில் சுழற்சி முறையில் வீரர்களை தேர்வு செய்ததற்கு பல காரணங்கள் உள்ளன. மூன்று வடிவங்கள் இருக்கின்றன. ஒரு வீரர் காயமடையும் வரை விளையாட வைக்க முடியாது.

    இவ்வாறு கூறினார் ஜோ ரூட்.
    Published by:Muthukumar
    First published: