''இந்திய கிரிக்கெட் அணியை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்'' - டிராவிடுக்காக பி.சி.சி.ஐ-யை விளாசிய கங்குலி

Vijay R | news18-tamil
Updated: August 7, 2019, 7:28 PM IST
''இந்திய கிரிக்கெட் அணியை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்'' -  டிராவிடுக்காக பி.சி.சி.ஐ-யை விளாசிய கங்குலி
Vijay R | news18-tamil
Updated: August 7, 2019, 7:28 PM IST
இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் டிராவிடுக்கு பிசிசிஐ நோட்டிஸ் வழங்கியதை சவுரவ் கங்குலி கடுமையாக விமர்சித்துள்ளார்.

இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் இரட்டை பதவிகள் மூலம் ஆதாயம் பெற்று வருவதாக தொடர்ந்து குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. சச்சின், கங்குலி, லக்ஷ்மன் உள்ளிட்டோரும் இந்த குற்றச்சாட்டுக்கு ஆளாகி இருந்தனர். தற்போது இதே குற்றச்சாட்டிற்காக டிராவிட் சிக்கி உள்ளதால் பிசிசிஐ சார்பில் அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

நேஷ்னல் கிரிக்கெட் அகாடமியின் தலைவராகவும், இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனத்தின் துணைத் தலைவராகவும் ஆதாயம் தரும் இரு பதவிகளில் டிராவிட் இருக்கிறார் என அவர் மீது புகார் வைக்கப்பட்டுள்ளது. எனவே இது குறித்து விளக்கமளிக்க டிராவிட்டிற்கு 2 வாரங்கள் கால அவகாசம் பிசிசிஐ தரப்பிலிருந்து அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் டிராவிட்டிற்கு நோட்டீஸ் வழங்கியது தொடர்பாக பிசிசிஐ-யை கடுமையாக விமர்சித்து சவுரவ் கங்குலி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில். “இந்திய கிரிக்கெட்டில் இரட்டை பதவி ஆதாய குற்றச்சாட்டு புதிதாக முன்வைக்கப்படுகிறது. செய்திகளில் தொடர்ந்து இடம்பெறுவதற்கான சிறந்த வழி,இந்திய அணியை கடவுள் தான் காப்பாற்ற வேண்டும். ராகுல் டிராவிட்டிற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது“ என்றுள்ளார்.



கங்குலியின் இந்த கருத்தை ஹர்பஜன் சிங் வரவேற்றுள்ளார். ட்விட்டரில் அவர் பதிவிட்டுள்ள கருத்தில், “இந்திய கிரிக்கெட்டுக்கு டிராவிட்டை விட சிறந்த நபர் கிடைக்க மட்டார். இதுபோன்ற ஜாம்பாவன்களுக்கு நோட்டீஸ் அனுப்புவது என்பது அவர்களை அவமதிக்கும் செயல். கிரிக்கெட்டின் மேம்பாட்டுக்கு அவர்களின் சேவை தேவை.. ஆம், இந்திய கிரிக்கெட்டை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்” என்றுள்ளார்.

First published: August 7, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...