ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

ஸ்லிம்மா வேணும்னா பேஷன் ஷோ போங்க.. கிரிக்கெட்டர்கள் எல்லா சைஸ்லயும் தான் இருப்பாங்க - தேர்வுக்குழுவை வறுத்தெடுத்த கவாஸ்கர்

ஸ்லிம்மா வேணும்னா பேஷன் ஷோ போங்க.. கிரிக்கெட்டர்கள் எல்லா சைஸ்லயும் தான் இருப்பாங்க - தேர்வுக்குழுவை வறுத்தெடுத்த கவாஸ்கர்

சுனில் கவாஸ்கர்

சுனில் கவாஸ்கர்

கிரிக்கெட் வீரர்களை சைஸ் வைத்து பார்க்காதீர்கள் அவர்கள் ரன் குவிக்கிறார்களா விக்கெட் எடுக்கிறார்களா என்று பாருங்கள் சுனில் கவாஸ்கர் காட்டம்

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Chennai [Madras], India

பிசிசிஐ அறிவித்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் ஸ்குவாடில் சர்ஃப்ராஸ் கான் பெயர் இல்லாதது பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்தது. தேர்வு குழு என்ன மனநிலையில் இருக்கிறது என பலரும் கேள்வி எழுப்பியிருந்தனர். தொடர்ச்சியாக உள்ளூர் போட்டிகளில் ரன்களை குவித்து வரும் சர்ஃப்ராஸ் கானுக்கு அணியில் இடம் இல்லை என்பதை பலரும் ஏற்றுக்கொள்ளவில்லை. முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலர் இதுகுறித்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.

சர்ஃப்ராஸ் கானுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர் கவாஸ்கர் ,” சர்ஃப்ராஸ் கான் சதமடித்துவிட்டு நேராக பெவிலியனில் போய் உட்காருவதில்லையே. அவர் மீண்டும் அடுத்த இன்னிங்ஸில் களத்தில் வந்து பீல்டிங் செய்கிறார். நீங்க ஸ்லிம் மற்றும் ஒல்லியாக ஆட்கள் வேண்டும் என்றால் பேஷன் ஷோவுக்கு போங்க. அங்கிருந்து மாடல்களை பிடித்து வந்து அவர்கள் கையில் பேட் மற்றும் பந்துகளை கொடுத்து அனுப்புங்கள். கிரிக்கெட்டர்கள் எல்லா சைஸ்களிலும் தான் இருப்பார்கள். சைஸ் வைத்து பார்க்காதீர்கள் அவர்கள் ரன் குவிக்கிறார்களா விக்கெட் எடுக்கிறார்களா என்று பாருங்கள்.

நீங்க அன் ஃபிட்டாக இருந்தால் உங்களால் சதம் அடிக்க முடியாது. கிரிக்கெட்டுக்கு ஃபிட்னஸ் ரொம்ப முக்கியம். உங்களுடைய யோ-யோ டெஸ்ட் போன்ற சோதனைகளில் எனக்கு எந்த பிரச்னையும் கிடையாது. ஆனால் ஒரு யோ-யோ டெஸ்ட் மட்டும் வைத்து வீரர்களை மதிப்பிட முடியாது. கிரிக்கெட்டுக்கு அவர்கள் ஃபிட்டாக இருக்கிறார்களா என்று பார்க்க வேண்டும். கிரிக்கெட் விளையாட ஒரு ஃபிட்டாக இருந்தால் இதெல்லாம் ஒரு பிரச்னையே கிடையாது.” எனக் கூறியுள்ளார்.

முன்னதாக, உள்ளூர் போட்டிகளில் மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்தியும் தன்னால் இந்திய அணியில் இடம்பெற முடியாதது வேதனையை அளிப்பாத சர்ஃப்ராஸ் கான் கூறியுள்ளார். இதுதொடர்பாக பேசியவர், “ டெஸ்ட் கிரிக்கெட் ஸ்குவாட் அறிவிப்பில் என்னுடைய பெயர் இல்லை. அந்த நாள் முழுவதும் நான் கவலையாக இருந்தேன். கவுகாத்தியில் இருந்து டெல்லிக்கு பயணிக்கும் போது நான் தனிமையில் இருப்பது போல் உணர்ந்தேன். நான் உடைந்து அழுதேன். நான் என்னுடைய அப்பாவை டெல்லிக்கு அழைத்தேன். அவர் என்னுடன் பேசினார். என்னுடன் பிராக்டிஸ் செய்தார். அப்போது தான் கொஞ்சம் ரிலாக்ஸாக உணர்ந்தேன்” எனக் கூறியிருந்தார்.

First published:

Tags: BCCI, Cricket, Tamil News