‘கோ பாப்பா’ தோனியை உற்சாகப்படுத்திய மகள் ஸிவா

சென்னை அணி 19.4 ஓவரில் இலக்கை எட்டி வெற்றி பெற்று 4 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்தது.

news18
Updated: March 27, 2019, 9:18 AM IST
‘கோ பாப்பா’ தோனியை உற்சாகப்படுத்திய மகள் ஸிவா
ஸிவா தோனி
news18
Updated: March 27, 2019, 9:18 AM IST
டெல்லி - சென்னை அணிகளுக்கு இடையேயான போட்டியின் போது தோனியின் மகள் ஸிவா ‘கோ பாப்பா’ என சொல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

12-வது ஐபிஎல் சீசன் தொடரின் 5-வது லீக் போட்டி டெல்லியில் நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது டெல்லி அணி. முதலில் விளையாடிய டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 147 ரன்களை எடுத்தது. அந்த அணியின் தவான் ஐபிஎல் போட்டிகளில் தனது 33-வது அரை சதத்தை அடித்தார்.சென்னை அணி சார்பில் ப்ராவோ 3 விக்கெட்டுகளையும், சாஹர், ஜடேஜா, இம்ரான் தாஹிர் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

இதையடுத்து களமிறங்கிய சென்னை வீரர் வாட்சன் நிதானமாக விளையாடி 44 ரன்கள் சேர்த்தார். இறுதியில் சென்னை அணி 19.4 ஓவரில் இலக்கை எட்டி வெற்றி பெற்று 4 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்தது.

போட்டியின் நடுவில், தோனி விளையாடிக் கொண்டிருந்த போது ரசிகர்கள் தோனியை உற்சாகப்படுத்தினர், அப்போது அவருடைய மகள் ஸிவா தோனியும், மைதானத்தில் இருந்து ‘கோ பாப்பா’ என கூறி அவரை உற்சாகப்படுத்தினார். இந்த வீடியோ வெளியான சில நிமிடங்கலிலேயே சமூக வலைதளங்களில் வைரலானது.Also watch

First published: March 27, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...