ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

எல்லோரும் ஓட்டுப்போட போங்க... தோனியின் மகள் ஸிவாவின் மழலை கோரிக்கை!

எல்லோரும் ஓட்டுப்போட போங்க... தோனியின் மகள் ஸிவாவின் மழலை கோரிக்கை!

ஸிவா தோனியின் புதிய வீடியோ.

ஸிவா தோனியின் புதிய வீடியோ.

Go and vote like Mumma and Papa did: #MSDhoni daughter #Ziva makes cute appeal | ஜார்கண்ட் மாநிலம், ராஞ்சியில் உள்ள ஜவஹர் வித்யா மந்திர் வாக்குச்சாவடியில் தோனி வாக்களித்தார். #LokSabhaElections2019

 • News18
 • 2 minute read
 • Last Updated :

  எனது அம்மா, அப்பாவைப் போல் அனைவரும் வாக்களிக்கச் செல்லுங்கள் என தோனியின் செல்ல மகள் ஸிவா மழலை பேச்சில் கோரிக்கை வைத்துள்ளார்.

  நாடு முழுவதும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. 7 மாநிலங்களில் உள்ள 51 மக்களவைத் தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடக்கிறது. இன்று காலை 7 மணி முதலே வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.

  vote
  வாக்களிக்க நீண்ட வரிசையில் காத்திருந்த வாக்காளர்கள்.

  இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், தற்போதைய விக்கெட் கீப்பருமான மகேந்திர சிங் தோனி, தனது மனைவி சாக்‌ஷி மற்றும் குடும்பத்துடன் வாக்களித்தார்.

  ஜார்கண்ட் மாநிலம், ராஞ்சியில் உள்ள ஜவஹர் வித்யா மந்திர் வாக்குச்சாவடியில் தோனி வாக்களித்தார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன.

  தோனி, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வாக்களிப்பது குறித்து ஒரு விழிப்புணர்வு வீடியோ ஒன்றை பதிவேற்றம் செய்துள்ளார். அதில், அவரது செல்ல மகள் ஸிவா, “எனது அம்மா மற்றும் அப்பாவைப் போல் அனைவரும் வாக்களிக்கச் செல்லுங்கள்” என மழலை பேச்சில் கோரிக்கை வைத்துள்ளார்.
   
  View this post on Instagram
   

  Use your Power


  A post shared by M S Dhoni (@mahi7781) on  தற்போது இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகிறது.

  #LokSabhaElections2019: ராஞ்சியில் ஜனநாயக கடமையாற்றினார் தல தோனி!

  VIDEO: பேட்டை தோளில் போட்டு தலாட்டிய ரோகித்... ஏன் தெரியுமா?

  சி.எஸ்.கே அணியில் இருந்து முக்கிய வீரர் விலகல்? சென்னை ரசிகர்கள் அதிர்ச்சி!

  ஐபிஎல்-ல வேலை முடிஞ்சது... அதனால இப்ப சினிமா... - ஆண்ட்ரு ரசல் அதிரடி பிளான்

  Video: ஜூனியர் இம்ரான் தாஹிர் ரெடி!


  தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.  விளையாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  விளையாட்டு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.


  Published by:Murugesan L
  First published:

  Tags: Cricket, Elections 2019, Lok Sabha Elections 2019, MS Dhoni, Ziva Dhoni