யுவராஜ் சிங்கின் அசத்தலான சிக்ஸரைப் பார்த்து மலைத்து போன பாக். பவுலர்... வைரல் வீடியோ

அதிரடியாக ஆடிய யுவராஜ் சிங் 21 பந்துகளில் 3 சிக்ஸர், 3 பவுண்டரிகள் விளாசி 35 ரன்கள் குவித்தார்

Vijay R | news18
Updated: July 28, 2019, 9:51 PM IST
யுவராஜ் சிங்கின் அசத்தலான சிக்ஸரைப் பார்த்து மலைத்து போன பாக். பவுலர்... வைரல் வீடியோ
யுவராஜ் சிங்
Vijay R | news18
Updated: July 28, 2019, 9:51 PM IST
கனடா குளோபல் டி20 போட்டியில் அதிரடி வீரர் யுவராஜ் சிங் அடித்த சிக்ஸர் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

கனடா குளோபல் டி20 போட்டியில் டொரொண்டோ நேஷனல்ஸ் - எட்மாண்டன் ராயல்ஸ் அணிகள் மோதின. டொரொண்டோ நேஷனல்ஸ் அணி கேப்டனாக யுவராஜ் சிங் நியமிக்கப்பட்டுள்ளார். மழையின் காரணமாக இந்தப் போட்டி 19 ஓவர்களாக குறைக்கப்பட்டது.

இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த எட்மாண்டன் ராயல்ஸ் 19 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்கள் எடுத்தது. இந்த அணியின் கேப்டன் டூ-பிளசிஸ் 28 ரன்களும், கட்டிங் 43 ரன்களும் எடுத்தனர்.


192 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் யுவராஜ் சிங் தலைமையிலான டொரொண்டோ நேஷனல்ஸ் அணி களமிறங்கியது. தொடக்க வீரர்கள் மெக்லியாட் டக் அவுட்டாகியும், தாமஸ் 8 ரன்னிலும் அவுட்டாகினர். சரிவிலிருந்த அணியை யுவராஜ், கிளாசன் ஜோடி மீட்டனர்.இந்தப் போட்டியில் அதிரடியாக ஆடிய யுவராஜ் சிங் 21 பந்துகளில் 3 சிக்ஸர், 3 பவுண்டரிகள் விளாசி 35 ரன்கள் குவித்தார். பரபரப்பாக சென்ற போட்டியில் டொரொண்டோ நேஷனல்ஸ் அணி 18வது ஓவரில் இலக்கை எட்டியது.

இந்தப் போட்டியில் பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் ஷதாப் கான் பந்தில் யுவராஜ் சிங் அசத்தலான ஒரு சிக்ஸரை அடித்தார். ஷதாப் கானின் முந்தைய ஓவரிலும் யுவராஜ் இதுபோன்று சிக்ஸர் விளாசியதால் அவர் விரக்தி அடைந்தார்.யுவராஜ் சிங்கின் அதிரடியான ஆட்டத்தை மீண்டும் மைதானத்தில் பார்த்த ரசிகர்கள் அவருக்கு ஆரவார கூச்சலிட்டு மகிழ்ந்தனர்.
First published: July 28, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...