கேட்ச் பிடிக்க வீராங்கனையிடம் டிப்ஸ் கேட்கும் மேக்ஸ்வெல்!

#GlennMaxwell Seeks 'Catching Tips' | மெல்போர்னில் நடந்த கடைசி ஒரு நாள் போட்டியில் தோனியின் கேட்சை மேக்ஸ்வெல் தவறவிட்டிருந்தார். #HaideeBirkett

கேட்ச் பிடிக்க வீராங்கனையிடம் டிப்ஸ் கேட்கும் மேக்ஸ்வெல்!
ஆஸ்திரேலிய வீரர் மேக்ஸ்வெல். (AFP)
  • News18
  • Last Updated: January 19, 2019, 7:11 PM IST
  • Share this:
மெல்போர்னில் நடந்த கடைசி ஒரு நாள் போட்டியில் தோனியின் கேட்சை கோட்டைவிட்ட மேக்ஸ்வெல், கேட்ச் பிடிக்க வீராங்கனையிடம் டிப்ஸ் கேட்டுள்ளார்.

மெல்போர்னில் நடந்த 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டியில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது இந்திய அணி. அத்துடன், ஆஸ்திரேலிய மண்ணில் முதல் முறையாக ஒரு நாள் தொடரை வென்று சாதித்தது. இந்தியாவின் சாதனைக்கு முக்கிய காரணமாக இருந்தவர் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி.

Dhoni, தோனி
7-வது முறையாக ஒரு நாள் தொடரில் தொடர் நாயகன் விருதை தோனி பெற்றார். (BCCI)தோனி 87 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு உதவினார். 4-வது வீரராக களமிறங்கிய தோனி, தான் சந்திந்த முதல் பந்தில் மேக்ஸ்வெல்-க்கு கேட்ச் கொடுத்தார். ஆனால், மேக்ஸ்வெல் சரியாக பிடிக்காமல் கேட்சை கோட்டைவிட்டார்.அந்தப் போட்டியில் தோனிதான் மேட்ச் ஃபினிஷராக இருப்பார் என்று மேக்ஸ்வெல்-க்கு அப்போது தெரிந்திருக்காது. இந்நிலையில், மகளிருக்கான பிக் பேஷ் டி-20 லீக் தொடரின் அரையிறுதியில், பிரிஸ்பேனின் ஹெய்டி பிர்கெட், கடைசிப் பந்தில் அட்டகாசமான கேட்ச் பிடித்து அணியை வெற்றிபெற வைத்தார்.அவரின் கேட்ச் வீடியோவை ட்விட்டரில் பகிர்ந்த மேக்ஸ்வெல், “கேட்ச் பிடிக்க ஏதாவது டிப்ஸ் கிடைக்கும?” என்று கேட்டுள்ளார்.பந்தை நீங்களே வச்சுக்கோங்க…இல்லேனா நான் ஓய்வு என கூறுவார்கள்? தோனி கிண்டல்!

Also Watch...

First published: January 19, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...