க்ளென் மேக்ஸ்வெல் அடித்த ரிவெர்ஸ்-ஸ்வீப் சிக்ஸ்.. வாயடைத்துப்போன ரசிகர்கள் - வீடியோ
இறுதிப் போட்டியில் மேக்ஸ்வெல் ஆஸ்திரேலிய அணியை வெற்றிப் பாதைக்குக் கொண்டு செல்ல முடியாவிட்டாலும், அவர் அடித்த ஒரு ஷாட் ரசிகர்களின் வியப்பில் ஆழ்த்தியது.

மேக்ஸ்வெல் அடித்த ரிவெர்ஸ்-ஸ்வீப் சிக்ஸ்..
- News18 Tamil
- Last Updated: December 3, 2020, 8:44 PM IST
ஆஸ்திரேலியா, இந்தியா அணிகளுக்கிடையிலான ஒருநாள் போட்டி தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்றது. கடந்த நவம்பர் மாதம் 27ம் தேதி சிட்னியில் தொடங்கிய ஒரு நாள் தொடர் நேற்று (டிசம்பர் 2ம் தேதி) மனுகா ஓவலில் முடிவடைந்தது. மொத்தம் நடைபெற்ற 3 ஒரு நாள் போட்டிகளில் இந்தியாவுக்கு எதிராக விளையாடிய ஆஸ்திரேலிய அணி 2 போட்டிகளில் வெற்றிபெற்று தொடரை கைப்பற்றியது. மேலும் நேற்று (டிச.2) நடைபெற்ற போட்டியில் இந்தியா ஆறுதல் வெற்றியைப் பெற்றது.
போட்டிகள் ஆரம்பானது முதலே ஆஸ்திரேலிய அணி வீரர்கள் தங்களது அபார ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியவர்களில் கிளென் மேக்ஸ்வெலும் ஒருவர். நேற்று (டிச.2) நடந்த 3வது ஒரு நாள் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. ஆஸ்திரேலியாவின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் இந்தியா 152/5 கணக்கில் சுருண்டது. பின்பு களமிறங்கிய ரவீந்திர ஜடேஜா மற்றும் ஹர்திக் பாண்ட்யா இருவரும் அணியின் ஸ்கோரை 300க்கு உயர்த்தினர். இருவரின் ஆட்டமிழக்காத பார்ட்னெர்ஷிப்பால் 51 பந்துகளில் 100 ரன்களைக் குவித்தனர்.
அதன்படி ரவீந்திர ஜடேஜா 50 பந்துகளில் 66 ரன்களை குவித்தார். ஹர்திக் பாண்டியா 76 பந்துகளில் 92 ரன்களைக் குவித்தார். கடைசியாக 50 ஓவர் முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 302 ரன்களைக் குவித்தது. இதையடுத்து, 303 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் ஃபிஞ்ச் 75 பந்துகளில் 82 ரன்களைக் குவித்து ஆட்டமிழந்தார். அடுத்தபடியாக மிடில் ஆர்டர் வரிசையில் வந்த பேட்ஸ்மேன்கள் கேமரூன் கிரீன் 21 ரன்களும், அலெக்ஸ் கேரி 38 ரன்களும், ஆஷ்டன் அகர் 28 ரன்களும் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தனர். இப்படி ஒவ்வொருவராக ஆட்டமிழக்க, மிடில் ஆர்டரில் ஒரு ஆஸ்திரேலிய வீரர் மட்டும் இந்தியா பந்துவீச்சாளர்களுக்கு சமாளித்து தனது அசாதாரண ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார். அவர்தான் க்ளென் மேக்ஸ்வெல். 2020ம் ஆண்டில் கிங்ஸ் லெவன் பஞ்சாபிற்காக ஒரு மறக்கமுடியாத ஐபிஎல் பயணத்தை மேற்கொண்ட மேக்ஸ்வெல், ஒருநாள் தொடரில் தனது வழக்கமான திறமையை வெளிப்படுத்தினார். மூன்று பவுண்டரிகள் மற்றும் நான்கு சிக்ஸர்கள் என மேக்ஸ்வெல் தனது 3வது ஒருநாள் போட்டியில் 38 பந்துகளில் 59 ரன்களைக் குவித்தார்.
Also read: இந்திய அணிக்காக விளையாடியது எங்களுக்கு மட்டுமல்ல ஊருக்கே மகிழ்ச்சி - நடராஜன் தாய் பெருமிதம்
இறுதிப் போட்டியில் அவரால் அணியை வெற்றி பாதைக்குக் கொண்டு செல்ல முடியாவிட்டாலும், அவர் அடித்த ஒரு ஷாட் ரசிகர்கள் மற்றும் பார்வையாளர்கள் நினைவில் இருந்து இன்னும் மறைந்திருக்காது என்பது தான் உண்மை. 43வது ஓவரில் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவின் 3வது பந்துவீச்சின்போது, ரைட் ஹாண்டட் பேட்ஸ்மேன் மேக்ஸ்வெல் 100 மீட்டர் பிரம்மாண்டமான சிக்சை அடித்தார். இதைவிட மற்றொரு ரிவெர்ஸ் ஸ்வீப் சிஸ்க்ஸ் அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது என்றும் சொல்லலாம்.
இவரின் அந்த ஷாட்க்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் பாராட்டுகள் கிடைத்துள்ளன. ட்விட்டரில் பல்வேறு கருத்துகளை பகிரப்பட்டுள்ளன.
இதையடுத்து, 45வது ஓவரில் 59 ரன்களைக் குவித்த மேக்ஸ்வெல் ஜஸ்பிரீத் பும்ராவின் பந்துவீச்சால் தனது ஆட்டத்தை இழந்தார். இந்த நிலையில், 49.3 ஓவர் முடிவில் ஆஸ்திரேலிய அணி அனைத்து விக்கெட்டுகளை இழந்து 289 ரன்களை மட்டுமே எடுத்தது. இதனால் 13 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அணி ஆறுதல் வெற்றியைப் பெற்றது.
போட்டிகள் ஆரம்பானது முதலே ஆஸ்திரேலிய அணி வீரர்கள் தங்களது அபார ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியவர்களில் கிளென் மேக்ஸ்வெலும் ஒருவர். நேற்று (டிச.2) நடந்த 3வது ஒரு நாள் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. ஆஸ்திரேலியாவின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் இந்தியா 152/5 கணக்கில் சுருண்டது. பின்பு களமிறங்கிய ரவீந்திர ஜடேஜா மற்றும் ஹர்திக் பாண்ட்யா இருவரும் அணியின் ஸ்கோரை 300க்கு உயர்த்தினர். இருவரின் ஆட்டமிழக்காத பார்ட்னெர்ஷிப்பால் 51 பந்துகளில் 100 ரன்களைக் குவித்தனர்.
அதன்படி ரவீந்திர ஜடேஜா 50 பந்துகளில் 66 ரன்களை குவித்தார். ஹர்திக் பாண்டியா 76 பந்துகளில் 92 ரன்களைக் குவித்தார். கடைசியாக 50 ஓவர் முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 302 ரன்களைக் குவித்தது. இதையடுத்து, 303 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் ஃபிஞ்ச் 75 பந்துகளில் 82 ரன்களைக் குவித்து ஆட்டமிழந்தார். அடுத்தபடியாக மிடில் ஆர்டர் வரிசையில் வந்த பேட்ஸ்மேன்கள் கேமரூன் கிரீன் 21 ரன்களும், அலெக்ஸ் கேரி 38 ரன்களும், ஆஷ்டன் அகர் 28 ரன்களும் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தனர்.
Also read: இந்திய அணிக்காக விளையாடியது எங்களுக்கு மட்டுமல்ல ஊருக்கே மகிழ்ச்சி - நடராஜன் தாய் பெருமிதம்
இறுதிப் போட்டியில் அவரால் அணியை வெற்றி பாதைக்குக் கொண்டு செல்ல முடியாவிட்டாலும், அவர் அடித்த ஒரு ஷாட் ரசிகர்கள் மற்றும் பார்வையாளர்கள் நினைவில் இருந்து இன்னும் மறைந்திருக்காது என்பது தான் உண்மை. 43வது ஓவரில் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவின் 3வது பந்துவீச்சின்போது, ரைட் ஹாண்டட் பேட்ஸ்மேன் மேக்ஸ்வெல் 100 மீட்டர் பிரம்மாண்டமான சிக்சை அடித்தார். இதைவிட மற்றொரு ரிவெர்ஸ் ஸ்வீப் சிஸ்க்ஸ் அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது என்றும் சொல்லலாம்.
🤯
We're speechless, so describe this shot by @Gmaxi_32 in one word #AUSvIND pic.twitter.com/0WxK67daYl
— cricket.com.au (@cricketcomau) December 2, 2020
இவரின் அந்த ஷாட்க்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் பாராட்டுகள் கிடைத்துள்ளன. ட்விட்டரில் பல்வேறு கருத்துகளை பகிரப்பட்டுள்ளன.
that is a massive six and it looks like he didn't quite catch it properly. Could have hit it to Auckland if it came out of the middle https://t.co/K2iR2ZxAUp
— Paul Colgan (@Colgo) December 2, 2020
Cracking from Maxwell and I always love the Aussie commentators 😂 https://t.co/VdmcMB6C6J
— Callum Ross (@callumbrownie) December 2, 2020