இப்ப மட்டும் கத்துதா அந்த பல்லி..? மேக்ஸ்வெலின் ஆட்டத்தை பார்த்த கே.எல்.ராகுலின் ரியாக்ஷ்ன் - வைரல் மீம்

இப்ப மட்டும் கத்துதா அந்த பல்லி..? மேக்ஸ்வெலின் ஆட்டத்தை பார்த்த கே.எல்.ராகுலின் ரியாக்ஷ்ன் - வைரல் மீம்

India vs Australia | ஐ.பி.எல் 2020 தொடரில் 13 போட்டிகளில் விளையாடிய மேக்ஸ்வெல் வெறும் 108 ரன்கள் மட்டுமே எடுத்தார்.

 • Share this:
  இந்திய - ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் மேக்ஸ்வேல் அதிரடியாக விளையாடி ரன் குவித்தார். ஐ.பி.எல் போட்டியில் சோபிக்காத மேக்ஸ்வெல் சொந்த நாட்டுக்காக அதிரடியை விளையாடியதை பார்த்த ரசிகர்கள் அதை கேலி செய்யும் விதமாக கே.எல்.ராகுல் புகைப்படத்தை பதிவிட்டு ட்ரோல் செய்து வருகின்றனர்.

  கொரோனா வைரஸ் ஊரங்கு தளர்வுகளுக்கு பின் ஆஸ்திரேலியாவில் தனது முதல் சுற்றுப்பயணத்தை இந்திய அணி மேற்கொண்டுள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒரு நாள் போட்டி சிட்னி மைதானத்தில் நேற்று நடைபெற்றது.

  இந்த போட்டியில் முதலில் விளையாடிய ஆஸ்திரேலிய அணி 50 ஒவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 374 ரன்கள் எடுத்தது. ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஃபின்ச் 114 ரன்களும், ஸ்டீவன் ஸ்மித் 105 ரன்களும் குவித்தனர். அதன்பின் விளையாடிய இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 308 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 66 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது.

  இந்தப் போட்டியில் அதிரடியாக விளையாடிய மேக்ஸ்வெல் 19 பந்துகளில் 3 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 45 ரன்கள் குவித்தார். ஐக்கிய அமீரகத்தில் நடைபெற்ற ஐ.பி.எல் 2020 தொடரில் ஒரு போட்டியில் கூட சோபிக்காத மேக்ஸ்வெல் சொந்த நாட்டிற்காக சிறப்பாக விளையாடியதை பார்த்த ரசிகர்கள் அவரை விமர்சனம் செய்து வருகின்றனர்.

  கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டன் கே.எல்.ராகுலின் புகைப்படத்தை, கிரிக்கெட் போட்டிகளில் எப்போதும் வைரலாகும் பாகிஸ்தான் ரசிகரின் புகைப்படத்தில் மாஃபிங் செய்து வைத்துள்ளனர். இந்த புகைப்படத்தை நியூசிலாந்து வீரரும், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் வீரருமான ஜிம்மி நிஷாம் தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.  ஐ.பி.எல் 2020 தொடரில் 13 போட்டிகளில் விளையாடிய மேக்ஸ்வெல் வெறும் 108 ரன்கள் மட்டுமே எடுத்தார்.அவர் இந்த சீசனல் 21 ஓவர்கள் வீசி 3 விக்கெட்களை மட்டுமே எடுத்தார். இந்த சீசனில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு மேக்ஸ்வெலின் ஆட்டம் ஏமாற்றமாகவே அமைந்தது.

  அண்மை செய்திகளுக்கு உடனுக்கு உடன் இணைதிருந்துகள்.
  Published by:Vijay R
  First published: