முகப்பு /செய்தி /விளையாட்டு / ‘கே.எல். ராகுலுக்கு மேலும் ஒரு வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும்’ – சுனில் கவாஸ்கர் கருத்து

‘கே.எல். ராகுலுக்கு மேலும் ஒரு வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும்’ – சுனில் கவாஸ்கர் கருத்து

கே.எல். ராகுல்

கே.எல். ராகுல்

பல்வேறு தரப்பினர் கே.எல்.ராகுலின் ஆட்டம் குறித்து கேள்வி எழுப்பி வருவதால் அவர் மீதான நெருக்கடி அதிகரித்துள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

இந்திய அணியில் மோசமான ஃபார்மில் இருக்கும் கே.எல்.ராகுலுக்கு மேலும் ஒரு போட்டியில் விளையாட வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும் என்று முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் வலியுறுத்தியுள்ளார். இந்திய அணியின் முக்கிய ஆட்டக்காரராக இருக்கும் கே.எல். ராகுல் கடந்த சில மாதங்களாக ரன்களை குவிக்க முடியாமல் திணறி வருகிறார். இதையடுத்து அவருக்கு டி20 போட்டிகளில் விளையாட வாய்ப்பு மறுக்கப்பட்டது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் அவர் இடம்பெற்றிருந்தாலும், ஆடும் லெவனில் ஃபார்மில் இருக்கும் சுப்மன் கில்லுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் வலியுறுத்தினர்.

ஆனால் கில்லை பெஞ்ச்சில் அமரவைத்த கேப்டன் ரோஹித் சர்மா, கே.எல். ராகுலுக்கு வாய்ப்பு அளித்தார். ஒருநாள் போட்டிகளில் ராகுல் விக்கெட் கீப்பராக செயல்பட்டார். இந்த தொடரில் கே.எஸ். பரத்திற்கு வாய்ப்பு அளிக்கப்பட்டதால், முழு நேர பேட்ஸ்மேனாக ராகுல் களத்தில் இறங்கினார். ஆனால் எதிர்பார்ப்புக்கு மாற்றமாக அவர் 71 பந்துகளில் 20 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். இதனால், அவருக்கு பதிலாக கில்லுக்கு டெல்லி டெஸ்ட் போட்டியில் வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும் என்று தற்போது வலியுறுத்தல்கள் எழுந்துள்ளன.

இதுகுறித்து முன்னாள் வீரர் கவாஸ்கர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது- கே.எல்.ராகுலுக்கு மேலும் ஒரு வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும். டெல்லி டெஸ்ட் போட்டியில் அவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார். அந்த போட்டிக்கு பின்னர் நாம் கே.எல்.ராகுல் குறித்து முடிவு எடுக்கலாம். அவருக்கு மாற்று வீரர் என்ற போட்டியில் சுப்மன் கில் முன்னிலையில் இருக்கிறார். அவருக்கு வாய்ப்பு வழங்கலாம். இவ்வாறு அவர் கூறினார். பல்வேறு தரப்பினர் கே.எல்.ராகுலின் ஆட்டம் குறித்து கேள்வி எழுப்பி வருவதால் அவர் மீதான நெருக்கடி அதிகரித்துள்ளது. இதனால் அடுத்த போட்டியில் கட்டாயம் ரன் குவிக்க வேண்டும் என்கிற நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

First published:

Tags: Cricket