ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

பாபர் அசாம், விராட் கோலி, 9 மரத்துண்டுகள் போதும் - முன்னாள் பாக். வீரரின் மிகப்பெரிய சவால்

பாபர் அசாம், விராட் கோலி, 9 மரத்துண்டுகள் போதும் - முன்னாள் பாக். வீரரின் மிகப்பெரிய சவால்

விராட் கோலி

விராட் கோலி

விராட் கோலி, பாபர் அசாம் மற்றும் 9 மரத்துண்டுகள் போதும் நான் உலகக் கோப்பையை வெல்வேன் என்று பாகிஸ்தான் முன்னாள் விக்கெட் கீப்பர் ரஷீத் லத்தீப் மிகவும் தைரியமான சவால் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

விராட் கோலி, பாபர் அசாம் மற்றும் 9 மரத்துண்டுகள் போதும் நான் உலகக் கோப்பையை வெல்வேன் என்று பாகிஸ்தான் முன்னாள் விக்கெட் கீப்பர் ரஷீத் லத்தீப் மிகவும் தைரியமான சவால் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதுவும் அவர் சொந்தக் கற்பனை அல்ல என்பது குறிப்பிடத்தக்கது. இங்கிலிஷ் பிரீமியர் லீக் அணியான மான்செஸ்டர் யுனைடெட் முன்னாள் மேலாளர் சர் அலெக்ஸ் பெர்குசன் சாம்பியன்ஸ் லீக்கை வெல்வதற்கு தனக்கு ஜினெடின் ஜிடேன் மற்றும் 10 மரத்துண்டுகள் போதும் என்றார், அதையே மாற்றி இவர் பாபர் அசாம், விராட் கோலி மற்றும் 9 மரத்துண்டுகள் போதும் என்று மாற்றிக் கூறியிருக்கிறா. மொத்தத்தில் சொந்தக் கருத்தல்ல மண்டபத்தில் பெர்கூசன் கூறியதை எடுத்து வந்து பரிசு கேட்கிறார் பாகிஸ்தான் தருமி.

கோஹ்லி மற்றும் பாபர் இருவரும் உலக கிரிக்கெட்டில் மிகவும் பிரபலமான மற்றும் வெற்றிகரமான பேட்டர்கள். கோலி தனது பெயருக்கு உலகக் கோப்பை பட்டத்தை வைத்திருந்தாலும், 2011-இல் எம்.எஸ் தோனியின் கீழ் கோப்பையை வென்ற அணியில் முக்கிய அங்கமாக இருந்தார் கோலி. ஆனால் உலகக் கோப்பைகளுக்கு வரும்போது பாபர் இன்னும் வெற்றியைச் சுவைக்கவில்லை.

இந்நிலையில் பாகிஸ்தான் முன்னாள் விக்கெட் கீப்பர் ரஷீத் லத்தீப் கூறும்போது, “பாபர் அசாம், விராட் கோலி மற்றும் ஒன்பது மரத்துண்டுகளை என்னிடம் கொடுங்கள், நான் உங்களுக்கு உலகக் கோப்பையை வெல்வேன். இந்தக் கருத்தின் வீடியோவை ரஷீத் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். வீடியோ இதோ:

பாபர் மற்றும் விராட் இதுவரை அந்தந்த நாடுகளுக்கான கிரிக்கெட் வீரர்களாக மிகவும் வெற்றிகரமான பதவிகளை பெற்றுள்ளனர். கோஹ்லி இப்போது மூன்று வடிவங்களிலும் இந்திய அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகியிருந்தாலும், மூன்று வடிவங்களிலும் பாகிஸ்தான் கேப்டனாக அசாம் நியமிக்கப்பட்டார்.

First published:

Tags: Babar Azam, ICC world cup, India vs Pakistan, Virat Kohli