Home » News » Sports » CRICKET GILL BRILLIANT HALF CENTURY ENSURES TAKE THE ATTACK TO THE AUSSIES INDIA 83 1 IN BRISBANE MUT

பிரிஸ்பன் டெஸ்ட்: ஷுப்மன் கில் அபார அரைசதம்; ஆளை அடிக்கும் பந்து வீச்சில் இறங்கிய ஆஸி.

பிட்சில் உள்ள ஈரப்பதம் அடிக்கும் வெயிலினால் காய்ந்து போகும் நிலை உருவாகியுள்ளது, உணவு இடைவேளைக்கு பிறகு பந்துகள் கொஞ்சம் சுர் சுர்ரென்று வரும்.

பிரிஸ்பன் டெஸ்ட்: ஷுப்மன் கில் அபார அரைசதம்; ஆளை அடிக்கும் பந்து வீச்சில் இறங்கிய ஆஸி.
ஷுப்மன் கில்.
  • Share this:
328 ரன்கள் வெற்றி இலக்கை நோக்கி ஆடி வரும் இந்திய அணி பிரிஸ்பன் டெஸ்ட் 5ம் நாள் உணவு இடைவேளை வரை ரோஹித் சர்மா (7), விக்கெட்டை இழந்து 83 ரன்கள் எடுத்துள்ளது.

ஷுப்மன் கில் மிகப்பிரமாதமாக ஆடி வருகிறார் அவர் 117 பந்துகளில் 5 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 64 ரன்கள் எடுத்துள்ளார், புஜாரா தன் பாணியில் 90 பந்துகளில் 8 ரன்கள் எடுத்து ஆடி வருகிறார்.

ரோஹித் சர்மா வழக்கமான ஒரு கமின்ஸ் அவுட் ஸ்விங்கரில் எட்ஜ் செய்ய டிம் பெய்ன் முதல் ஸ்லிப்புக்கு முன்னால் பாய்ந்து கேட்சைப் பிடித்தார். 7 ரன்களில் அவர் வெளியேறினார். 18/1 என்ற நிலையிலிருந்து ஷுப்மன் கில் புஜாரா ஜோடி 65 ரன்களைச் சேர்த்துள்ளது. ஆனால் இதில் வெறும் 8 ரன்கள்தான் புஜாராவின் பங்களிப்பு.


ஆனால் கடைசியில் கமின்ஸ், ஸ்டார்க் ஆளை அடிக்கும் ஷார்ட் பிட்ச் பவுன்சர் உத்தியான பாடிலைன் பவுலிங்கில் இறங்கினர். ஒருமுறை புஜாரா பின் மண்டையில் வங்கினார், பிறகு உடலில் வாங்கினார், ஆனால் ஷுப்மன் கில்லிடம் இந்த உத்தி எடுபடவில்லை, ஸ்டார்க் ஷார்ட் பிட்ச் ஒன்றை ஆப் ஸ்டம்பில் வீச பின்னால் சென்று சேவாக் பாணியில் ஒரு அப்பர் கட், பந்து தேர்ட்மேனுக்கு மேல் சிக்சருக்குப் பறந்தது. மற்றபடி எல்லா ஷார்ட் பிட்ச் பந்துகளையும் கில் ஆக்ரோஷமாக எதிர்கொள்கிறார்.

இன்று இன்னமும் 62 ஓவர்களை இந்திய அணி ஆடியாக வேண்டும், வெற்றி பெற மேலும் 245 ரன்கள் தேவை, உணவு இடைவேளைக்கும் தேநீர் இடைவேளைக்கும் இடைபப்ட்ட ஆட்டம் மிக முக்கியமானது, இதில் விக்கெட்டை இழக்காமலோ, அல்லது ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து ஒரு இதே போல் 80 ரன்களை எடுத்தால் கடைசி செஷனில் வெற்றி இலக்கை நோக்கிய ஒரு அதிரடியை எதிர்நோக்கலாம். இல்லையெனில் பாதுகாப்பாக டிரா செய்தால் பார்டர்-கவாஸ்கர் டிராபியை இந்தியா தக்கவைக்கும்.

பிட்சில் உள்ள ஈரப்பதம் அடிக்கும் வெயிலினால் காய்ந்து போகும் நிலை உருவாகியுள்ளது, உணவு இடைவேளைக்கு பிறகு பந்துகள் கொஞ்சம் சுர் சுர்ரென்று வரும்.புஜாராவுக்கு நேதன் லயன் மோசமான லெக் ஸ்டம்ப் லைனில் வீசினார் என்று ஷேன் வார்ன் வர்ணனையில் கடும் விமர்சனங்களை முன் வைத்து வருகிறார்.
First published: January 19, 2021
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories