கோலியை மீண்டும் கேப்டனாக நியமித்தவர்கள் “நொண்டி வாத்துக்கள்“ - கவாஸ்கர் காட்டம்

விராட் கோலி உலகக் கோப்பையில் கேப்டனாக பெரிய அளவில் ஜொலிக்கவில்லை. அவரையும் மட்டும் ஏன் கேப்டனாக வைத்துள்ளனர்.

Vijay R | news18
Updated: July 29, 2019, 7:35 PM IST
கோலியை மீண்டும் கேப்டனாக நியமித்தவர்கள் “நொண்டி வாத்துக்கள்“ - கவாஸ்கர் காட்டம்
முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர்.
Vijay R | news18
Updated: July 29, 2019, 7:35 PM IST
மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான தொடரில் விராட் கோலியை கேப்டனாக நியமித்துள்ள தேர்வு குழுவினரை சுனில் கவாஸ்கர் கடுமையாக விமர்சித்துள்ளார்.

உலகக் கோப்பைத் தொடரில் இந்திய அணி அரையிறுதி போட்டியுடன் வெளியேறியதை அடுத்து விராட் கோலி மீதான விமர்சனம் அதிகப்படியாக எழுந்தது. ஒரு நாள் போட்டிகளுக்கும், டெஸ்ட் போட்டிகளுக்கும் தனித்தனி கேப்டனை நியமிக்க வேண்டுமென கருத்துகள் எழுந்தது.

உலகக் கோப்பைத் தொடரில் சிறப்பாக விளையாடிய ரோஹித் சர்மா இந்திய அணியை வழிநடத்த வேண்டுமென முன்னாள் வீரர்கள் கருத்து தெரிவித்திருந்தனர். உலகக் கோப்பைத் தொடரின் ஏற்பட்டத் தோல்வியால் விராட் கோலியின் கேப்டன்ஷிப் குறித்து கேள்வி எழுப்பப்படும் என்று எதிர்பார்த்திருந்த வேளையில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு தொடருக்கும் விராட் கோலி கேப்டனாக நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர் கருத்து தெரிவித்துள்ளார். அதில் “விராட் கோலியை மீண்டும் கேப்டனாக நியமித்தது மூலம் இந்திய கிரிக்கெட் தேர்வு அணியினர் நொண்டி வாத்துக்கள் போல் செயல்படுகின்றனர்.

உலகக் கோப்பையில் சரியாக விளையாடமல் இருந்த கேதர் ஜாதவ், தினேஷ் கார்த்தி ஆகியோருக்கு மேற்கிந்திய தீவுகள் சுற்றுபயணத்தில் இடம்பெறவில்லை. விராட் கோலியும் கேப்டனாக பெரிய அளவில் ஜொலிக்கவில்லை. அவரை மட்டும் ஏன் கேப்டனாக வைத்துள்ளனர். அவர்கள் மீண்டும் விராட் கோலியை எப்படி கேப்டனாகத் தேர்வு செய்தார்கள்.

Loading...

தற்போது உள்ள தேர்வுக்குழுவினரின் கடைசி அணி தேர்வு இதுவாக தான் இருக்கும். விரைவில் தேர்வு குழுவில் புதிய உறுப்பினர்கள் இடம் பெற உள்ளனர். அவர்கள் தேர்வு செய்யும் வீரர்களாவது சிறந்தவர்களாக இருக்க வேண்டும். அப்போது அந்த அணி சிறந்த அணியாக விளங்கும்" என கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

Also Watch

First published: July 29, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...