• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • Sunil Gavaskar: உங்களை மிரள வைத்த வேகப்பந்துவீச்சாளர்கள் யார்?: சுனில் கவாஸ்கரின் சுவாரஸ்ய பதில்!

Sunil Gavaskar: உங்களை மிரள வைத்த வேகப்பந்துவீச்சாளர்கள் யார்?: சுனில் கவாஸ்கரின் சுவாரஸ்ய பதில்!

சுனில் கவாஸ்கர்

சுனில் கவாஸ்கர்

இந்திய கிரிக்கெட் உற்பத்தி செய்த சிறந்த பேட்ஸ்மேன்கள் யார் என்று பட்டியலிட்டால் அதில் சுனில் கவாஸ்கரின் பெயர் நிச்சயம் முதல் நிலையில் இருக்கும்

  • Share this:
டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் சிறந்த வீரர்களுள் ஒருவராக விளங்கும் இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர், தான் ஆடும் காலத்தில் தன்னை அச்சுறுத்திய பந்து வீச்சாளர்கள் யார், எதிரணி வீரர்களில் சிறந்த பேட்ஸ்மேன் யார் என்பன போன்ற சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் உற்பத்தி செய்த சிறந்த பேட்ஸ்மேன்கள் யார் என்று பட்டியலிட்டால் அதில் சுனில் கவாஸ்கரின் பெயர் நிச்சயம் முதல் நிலையில் இருக்கும். இந்திய அணியின் முன்னாள் கேப்டனான சுனில் கவாஸ்கர் தான் டெஸ்ட் கிரிக்கெட்டில் 10,000 ரன்களை கடந்த முதல் வீரர் என்ற வரலாற்று சாதனைக்கு சொந்தக்காரர். அவருடைய நீண்ட நெடிய கிரிக்கெட் வாழ்க்கையில் பல வேக புயல்களை சந்தித்து தான் ரன்களை திரட்டியிருக்கிறார் என்ற போதிலும் அவருக்கும் அச்சுறுத்தலாக சில பந்து வீச்சாளர்கள் இருந்திருக்கிறார்கள் என்பதை அவரே வெளிப்படுத்தியிருக்கிறார் என்பது தான் ஆச்சரியமாக இருக்கிறது.

கவாஸ்கர் கிரிக்கெட் ஆடிய காலத்தில் பல அபாயகரமான வேகப்பந்து வீச்சாளர்கள் இருந்தனர். அவர்களில் குறிப்பிடக்கூடியவர்கள் என்றால் மேற்கு இந்திய தீவுகளின் மால்கம் மார்ஷல், ஜோயல் கார்னர், மைக்கேல் ஹோல்டிங், ஆண்டி ரபார்ட்ஸ், ஆஸ்திரேலியாவின் ஜெஃப் தாம்சன், டென்னிஸ் லில்லி, பாகிஸ்தானின் இம்ரான் கான், இங்கிலாந்தின் இயான் போத்தம், நியூசிலாந்தின் ரிச்சர்ட் ஹார்ட்லீ போன்றோரை கூறலாம்.

சுனில் கவாஸ்கர்


இருப்பினும் இத்தனை வேகப்புயல்களின் பந்துவீச்சையும் அவர் ஹெல்மெட் இல்லாமலே எதிர்கொண்டார். வேகப் பந்துகளை நொருக்கியெடுத்து மெஷின் போல ரன்களை குவித்து ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றார். அவர் டெஸ்ட் போட்டிகளில் சாதித்தது போல ஒரு நாள் போட்டிகளில் சாதிக்கவில்லை.

Also Read:    ‘சச்சினிடம் கற்றேன்; இந்த டெக்னாலஜி அப்போதே இருந்திருந்தால்’: ஆதங்கத்தை கொட்டிய வீரேந்தர் சேவக்!

கிரிக்கெட் குறித்த யூடியூப் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற சுனில் கவாஸ்கரிடம் உங்கள் காலத்தில் உங்களை மிரள வைத்த வேகப்பந்துவீச்சாளர்கள் என்றால் யாரை குறிப்பிடுவீர்கள் என கவாஸ்கரிடம் கேட்கப்பட்டது.

Also Read:   ”வேலையில்லாததால் வருமான வரி செலுத்த முடியவில்லை”- வருத்தப்படும் நடிகை கங்கனா ரனாவத்

அதற்கு பதிலளித்த போது, இரண்டு பந்துவீச்சாளர்களின் பந்துகளை எதிர்கொள்ளும் போது எனக்கு அச்சுறுத்தலாக இருந்தது. வேகம் மற்றும் தரம் என இருவகையாக அவர்களை பிரிக்கலாம். வேகத்தில் சிறந்தவராக ஜெஃப் தாம்சனை கூறலாம், அவருடைய பந்துவீச்சில் எப்போது வேண்டுமென்றாலும் விக்கெட்டை பறிகொடுக்கூடும். அவர்களுக்கு அடுத்தடுத்த இடத்தில் ஆண்டி ராபர்ட்ஸ், மால்கம் மார்ஷல், ரிச்சர்ட் ஹார்ட்லீ மற்றும் இம்ரான் கானை கூறலாம்.

அதே போல ஆண்டி ராபர்ட்ஸ் மிகவும் தரமான பந்துவீச்சாளர். அவரின் பந்துவீச்சின் போது எப்போதும் கவனமாக இருக்கவேண்டும். 100 ரன்களை கடந்து தெம்பாக ஆடிக்கொண்டிருந்தாலும் அவர் காலியாக்கிவிடக்கூடியவர். என்று கவாஸ்கர் கூறினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

உங்களின் காலகட்டத்தில் சிறந்த பேட்ஸ்மேன் என யாரை கூறுவீர்கள் என கேட்டபோது அவர் தாமதிக்காமல் சொன்ன ஒரு பெயர் விவியன் ரிச்சர்ட்ஸ். எதிரணியை தனது நேர்த்தியான பேட்டிங் மூலம் ஆதிக்கம் செலுத்தக் கூடியவர். அவர் தான் சிறந்த வீரர் என்பதை எல்லோரும் ஒத்துக் கொள்வார்கள். நான் பார்த்தவரை அவர் தான் சிறந்த பேட்ஸ்மேன் என கவாஸ்கர் கூறினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: