ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

தோனியை தவிர வேறு எந்த இந்திய கேப்டனாலும் முடியாது.. கம்பீர் பேச்சால் ரசிகர்கள் ஆச்சரியம்

தோனியை தவிர வேறு எந்த இந்திய கேப்டனாலும் முடியாது.. கம்பீர் பேச்சால் ரசிகர்கள் ஆச்சரியம்

மாதிரி படம்

மாதிரி படம்

டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி தோல்வி அடைந்து வெளியேறிய நிலையில் முன்னாள் வீரர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

   தோனியின் சாதனையை யாரலும் முறியடிக்க முடியாது என முன்னாள் கிரிகெட் வீரர் கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.

  டி20 உலகக்கோப்பை அரையிறுதி போட்டியில் இங்கிலாந்திடம் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து உள்ளதால் இந்திய அணியினரையும் கேப்டன் ரோகித் சர்மாவையும் சமூகவலைதளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறார்கள்.

  ஐசிசி தொடரில் கடைசியாக தோனி தலைமையிலான இந்திய அணி கடந்த 2013-ம் ஆண்டு இங்கிலாந்து அணியுடனான சாம்பியன்ஸ் டிராபி தொடரை வென்றது. அதன் பின்னர், ஐசிசி தொடரில் இந்திய அணி இதுவரை எந்த வித கோப்பையையும் வெல்லவில்லை.

  2011ஆம் ஆண்டு இந்திய அணி உலகக்கோப்பை வென்ற நாட்கள் வரும் போது ரசிகர்கள் அதனையும் அப்போழுது கேப்டனாக இருந்த தோனியையும் புகழ்ந்து பதிவிட்டு வருவார்கள். அப்போழுது கம்பீர் அந்த போட்டியில் அரை சதம் அடித்து பேட்டை உயர்த்தி காட்டும் புகைப்படத்தை பதிவிட்டு வருவதையும் வழக்கமாக கொண்டு இருப்பார். இதனால் தோனி ரசிகர்கள் கவுதம் கம்பீரை கடுமையாக விமர்சிபார்கள்.

  இதையும் படிங்க: இங்கிலாந்துக்கு எதிராக படுதோல்வி.. இந்திய அணியில் வரவிருக்கும் பல்வேறு மாற்றங்கள்

  இந்த நிலையில் டி20 உலகக்கோப்பையில் இந்திய அணியின் தோல்வி குறித்து பேசிய முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர்,

  தோனியை புகழ்ந்து தள்ளியுள்ளார். ஸ்டார்ஸ் போர்ட்ஸ் நிகழ்ச்சியின் பேசிய கம்பீர், யாரேனும் ஒருவர் வந்து ரோகித் சர்மா அடித்த இரட்டை சதங்களை விட அதிக இரட்டை சதங்கள் அடிக்கலாம். யாரேனும் வந்து கோலி அடித்ததை விட அதிக சதங்கள் அடிக்கலாம். ஆனால், 3 ஐசிசி கோப்பைகளை எந்த இந்திய கேப்டன்களாலும் வெற்றிபெற முடியாது என்று நான் நினைக்கிறேன்' என்றார். பேட்டியின்போது தோனியின் பெயரை கவுதம் கம்பீர் குறிப்பிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

  Published by:Arunkumar A
  First published:

  Tags: BCCI, Gautam Gambhir, ICC, MS Dhoni, T20 World Cup